✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🍵🍵உளுந்தின் நன்மைகள்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கடும் நோயில் இருந்து மீண்டவர்களும், உடல் பலவீனமானவர்களுக்கும் உளுந்து ஒரு வர பிரசாதம்.
இவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ, அரிசியுடன் கலந்தோ உண்டு வந்தால் தேகம் வலுவடையும்எலும்பு, தசை, நரம்புகள் ஊட்டமடைந்து உடல் வச்சிரமாகும்
உடலின் பாதிக்கு மேற்பட்ட நோய்க்கு உடல் சூடு காரணமாக இருக்கின்றது.
மன அழுத்தம்
ஓய்வில்லா உழைப்பு
தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு அதிகமாகிறது.
🍵🍵🍵🍵🍵
சுக்கு, வெந்தயம் தவிடு நீக்காத பச்சரிசியுடன் உளுந்து சேர்த்து பனை வெல்லம் கலந்து களி செய்து சாப்பிடால் உடல்சூடு தணியும்.
தாது விருத்தியாகஉளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும்.
🍵🍵🍵🍵🍵
உளுந்து வடையை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம். அதனுடன் ஏதாவது தேங்காய் சட்னியோ, தக்காளி சட்னியோ இருந்தால் சொல்லவே வேண்டாம். சுட சுட சாப்பிட்டு கொண்டே இருக்கலாம்.
உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.
விழுந்தால் உளுந்து உண்:
தடுமாறி விழும்போதுஉண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து.
தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்
🍵🍵🍵🍵🍵
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
உக்காந்து கொண்டே அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் வாரம் ஒரு முறையாவது உளுந்து கஞ்சி/களி சாப்பிடுங்கள்🍵🍵🍵🍵🍵
குழந்தைகளுக்கு
சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும். முக்கியமாக வயதுக்கு வந்த பெண்களுக்கும் உளுந்தங்களி உளுந்து பலகாரம் செய்து கொடுக்கவும் அப்போதான் சுக பிரசவத்திற்கு வழி வகுக்கும்
🍵🍵🍵🍵🍵
சிறுநீர் சார்ந்த நோய்கள் நீங்க, உளுந்து ஊறிய நீரை தினமும் பருகலாம்.
🍵🍵🍵🍵🍵
தோல் நீக்கப்படாத உளுந்து எலும்புகளுக்கு பலத்தைக் கொடுக்கும். ‘எலும்புருக்கி’ நோய் தீரும் என்று குறிப்பிட்டிருக்கிறார் சித்தர் அகத்தியர்.
🍵🍵🍵🍵🍵
உளுந்து மூலம் செய்யப்படும் உளுந்துத் தைலம், சித்த மருத்துவத்தில் வாத நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறதுவலிமை இழந்த தசைக்கு வலுவூட்ட உளுந்துத் தைலம் உதவுகிறது. தொக்கண முறைகளில் அதிக அளவில் உளுந்துத் தைலம் பயன்படுத்தப்படுகிறது.
முளைகட்டிய உளுந்து மூட்டு வலிக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
🍵🍵🍵🍵🍵
கருப்பு உளுந்து கஞ்சி செய்வது எப்படி
🍵🍵🍵🍵🍵
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து - 1 கப்
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
தூள் கருப்பட்டி - அரை கப்
சுக்கு தூள் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 5 கப்
செய்முறை :
உளுந்தை வாணலியில் இட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து சிறிது ஆறவைத்து பொடி செய்து கொள்ளவும்.
🍵🍵🍵🍵🍵
இந்த மாவில் 1 கப் நீர், சிறிது உப்பு கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரையுங்கள்.
🍵🍵🍵🍵🍵
அடிகனமான பாத்திரத்தில் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள உளுந்து மாவை கலந்து, நன்கு வேகும் வரை கைவிடாமல் கிளறுங்கள் மாவு வெந்து வரும்போது பொடித்து வைத்துள்ள கருப்பட்டி, சுக்குத்தூள் ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு காய்ச்சவும்
🍵🍵🍵🍵🍵
இந்த கஞ்சி காய்ச்சும் போது பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்திருக்க வேண்டும்.
🍵🍵🍵🍵🍵
கஞ்சி இறுகும் போது அந்த கொதி நீரை ஊற்றி கிழுகிழுப்பாக்கிக் கொண்டிருக்க வேண்டும்
🍵🍵🍵🍵🍵
இது ஊட்டச்சத்து நிறைந்தது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையிலோ, மாலையிலோ வழங்குங்கள்தசைகள் பலம் பெறும். மெலிந்த குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கஞ்சயை தயார் செய்து கொடுங்கள். வயதானவர்கள் மாலை நேரத்தில் இந்த கஞ்சியை சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலை போக்கும்.
🍵🍵🍵🍵🍵
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
💞💞💞💞💞
நன்றி : பெருசங்கர், ஈரோடு மாவட்டம், பவானி
செல் நம்பர் 7598258480
வாட்ஸ் அப் எண்
7598258480
🍵🍵🍵🍵🍵
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9750895059.
No comments:
Post a Comment