Thursday, March 25, 2021

குறிப்பிட்ட தெரு,வீடு உள்ள பகுதிகளில் மினி ஊரடங்கு : ராதாகிருஷ்ணன்

குறிப்பிட்ட தெரு,வீடு உள்ள பகுதிகளில் மினி ஊரடங்கு : ராதாகிருஷ்ணன்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு இல்லை, பாதிப்பு உள்ள இடங்களில் மட்டும் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நியூஸ் 7 சேனலுக்கு இன்று(மார்ச் 25) சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது. மினி ஊரடங்குதான். கொரோனா அதிகரித்து வருகிற நிலையில், அதை கட்டுப்படுத்தும் நோக்கில், பாதிப்பு உள்ள குறிப்பிட்ட தெரு, வீடு ஆகிய பகுதிகளில் மட்டும் ஊரடங்கை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வரும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம். மக்கள் பொறுப்புடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதிகரித்து வரும் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள், தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

இரண்டாவது டோஸ்

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடுவதற்கான தேதியை மக்களே தீர்மானித்து கொள்ளலாம் என தடுப்பூசிக்கான அதிகாரமிக்க அரசு குழுவின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எப்போது போட வேண்டும் என்பது குறித்த தகவல் கோவின் செயலி அல்லது இணையதளத்தில் அறிவிக்கப்படமாட்டது. அரசு நிர்ணயித்த காலத்திற்குள் மக்களே அதற்கான தேதியை தீர்மானித்துக் இரண்டாவது டோஸை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

கொரோனா கிட்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிற ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய கிட் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதில், வெப்ப நிலையை பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி, முழு உடற்கவச உடை, 3 அடுக்கு முகக்கவசம், காட்டன் முகக்கவசம், 2 வகையான கையுறை, 3 வகையான கிருமிநாசினி, மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 13 பொருட்கள் இருக்கும்.

இந்த உபகரணங்களை தமிழக சுகாதாரத்துறை கொள்முதல் செய்து வருகிறது. இதனால், வாக்காளர்கள் பாதுகாப்புடன் வாக்களிக்கலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே 38 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும், 15 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

இலவச தடுப்பூசி

நாடு முழுவதும் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் 2 லட்சம் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், ஸ்விக்கி நிறுவனத்தின் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி போட தகுதி உள்ளவர்களுக்கு நிறுவனத்தின் செலவிலேயே தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.


No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...