Monday, March 29, 2021

✍🏻💹💹இயற்கை வாழ்வியல் முறை💹💹மருத மரத்தின் நன்மைகள்.

✍🏻💹💹இயற்கை வாழ்வியல் முறை💹💹மருத மரத்தின் நன்மைகள்.

💹💹💹💹💹

பண்டை தமிழர்கள் பகுத்து வழங்கிய 5 வகை நிலங்களில் மருத நிலமும் ஒன்று. தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்த மருத மரமே மனிதன் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மருத்துவ மரமாக விளங்குகிறது.

💹💹💹💹💹

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட மருத மரத்தின் நன்மைகளையும் அதனை பயன்படுத்தும் முறையையும் பார்ப்போம்.

💹💹💹💹💹

மருத மரத்தின் இலைகளை நன்கு சுத்தம் செய்து விழுதாக அரைத்து தினமும் காலை வேளைகளில் ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பு நீங்கும்.

💹💹💹💹💹

மருத மரத்தில் உள்ள பழத்தை நீராவியில் வேக வைத்து அரைத்து அதை புண்களின் மீது கட்டினால் ஆறாத புண்கள் ஆறும். மரப்பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை கொண்டு புண்களை கழுவினால் விரைவில் குணமாகும்.       

💹💹💹💹💹

மருத மரத்தின் பூ, காய் ஆகியவற்றை சம அளவில் கொண்டு கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும்  சிவப்பு அணுக்களின் அளவு அதிகரிக்கும்.

💹💹💹💹💹

மருத மரத்தின் பட்டை 200 கிராம் சீரகம், சோம்பு, மஞ்சள் தலா 100 கிராம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக பொடித்து தூள் செய்யவும். பின்னர் அப்பொடியை வெந்நீரில் 5 கிராம் அளவு சேர்த்து தினமும் குடித்து வர ரத்த அழுத்தம் குணமடையும். 

இயற்கையின் அதிசயம்! - மருத மரம்- Dinamani

💹💹💹💹💹

மரத்தின் பட்டையை அரைத்து பொடியாக்கி குடி நீரில் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.

💹💹💹💹💹

ஆடாதோடை இலை சாறுடன் மருதம் பட்டை பொடி சிறிது சேர்த்து ஆட்டுப்பாலில் கலந்து குடித்து வந்தால் நுரையீரலில் ஏற்படும் உள் காயங்கள் ஆறிவிடும்.

💹💹💹💹💹

மருதம் பட்டை, கரிசலாங்கண்ணி பொடிகளை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வர கல்லீரலில் ஏற்பட்டுள்ள வீக்கம் குணமாகும்.

💹💹💹💹💹

மருதம் இலைகளை நிழலில் உலர்த்தி அத்துடன் சமமான அளவு மாதுளை பழத்தின் தோலை அரைத்து தண்ணீரில் காய்ச்சி கஷாயம் செய்து, பின்னர் அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் குணமாகும்.

💹💹💹💹💹

மருதம் பட்டை மற்றும் ஆவாரம் பட்டை இரண்டும் 200 கிராம், சுக்கு மற்றும் ஏலக்காய் தலா 20 கிராம் அனைத்தையும் ஒன்றாக அரைத்த தூள் செய்து பின்னர் தண்ணீரில் 5 கிராம் அளவில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் போல் காய்ச்சி காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மருத இலைகளை வதக்கி அதனை புண்களின் மீது கட்டி வர புண்கள் குணமாகும்

💹💹💹💹💹

ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடி, ஒரு ஸ்பூன் சீரக பொடி இரண்டையும் வெந்நீரில் சேர்த்து நன்கு கலக்கினால் பானம் தயார். சாப்பிடுவதற்கு முன்போ அல்லது சாப்பிடுவதற்கு பின்னரோ குடிக்கலாம். ஆனால் இரவு தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு குடிக்க வேண்டும். பானம் அருந்திய சில மணி நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் வரும்.

💹💹💹💹💹

மாத விலக்கு பெண்களுக்கு மாதவிலக்கு சரியான தேதிகளில் வருவதில்லை  அப்படிப்பட்டவர்கள் மருதம் இலைகளை காய வைத்து சூரணமாக்கி தினமும் இருவேளை சாப்பிட்டு வர மாதவிலக்கு சுழற்சி முறை, சீரடையும்.

மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி தீர மருதம் பட்டை, வேப்பம் பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு பெருங்காயம் சேர்த்து காலை மற்றும் மாலை மோருடன் கலந்து பருகி வர, மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி தீரும்.

மருதம் மரத்தின் இருக்கு மகத்தான வாழ்வியல் மருத்துவம்

💹💹💹💹💹

வாய் புண், தொண்டை வலி போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடியை கலந்து தண்ணீரில் 10 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு, அந்த நீரை வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி , வாய்ப்புண் குணமாகும்.

💹💹💹💹💹

மேலும் நன்கு உலர்ந்த மருதம்பட்டையை நன்கு பொடித்து அதை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா பிரச்சனைகள் குணமாகும்.

💹💹💹💹💹

இந்த நவீன காலத்தில் வாலிபர்கள் முதல் பெரியோர்கள் வரை மன உளைச்சல் உடையவர்களாகவே உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பயம், கோபம், தூக்கமின்மை போன்ற பிரச்னை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதம் பட்டை, வில்வம், துளசி சம அளவில் எடுத்து சூரணம் செய்து, காலை மற்றும் மாலை நேரத்தில் சாப்பிட்டு வர இந்த பிரச்னைகள் விலகும்.

💹💹💹💹💹

இதயம் சார்ந்த நோய்களுக்கு மருதம் பட்டை, வெண் தாமரைப் பூ 100 கிராம், ஏலக்காய், இலவங்கம் மற்றும் திரிகடுகம் 10 கிராம் அளவில் கலந்து பொடியாக்கி காலை மற்றும் மாலை வேளைகளில் 5 கிராம் அளவு பொடியை கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தி வர, இதய நோய் விரைவில் குணமடையும்.

💹💹💹💹💹

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருதம் பட்டை, ஆவாரம் பட்டை சம அளவு எடுத்து அதில் 2 ஏலக்காய் , சுக்கு சேர்த்து காலை மற்றும் மாலை வேளைகளில் காய்ச்சி காபி, டீ க்கு பதில் குடித்து வர சர்க்கரை நோய் தீரும்.

💹💹💹💹💹

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் மருதம் பட்டை மற்றும் சிறிதளவு சீரகம் , சோம்பு, மஞ்சள் சேர்த்து பொடியாக்கி காலை மற்றும் மாலை 5 கிராம் அளவு எடுத்து 1டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, தண்ணீர் அளவு 200 மில்லி ஆனதும் அதை ஆற வைத்து குடித்து வந்தால் இரத்த அழுத்த நோய் உங்களை விட்டு பறந்து போகும்.

மருத மரத்தின் நன்மைகள்! | Vivasayam | விவசாயம்

💹💹💹💹💹

ஒருமுறை ரத்த அழுத்த நோய்க்கு ஆட்பட்டுவிட்டால், வாழ்நாள் முழுக்க இந்நோய் நம்முள் இருந்துகொண்டேதான் இருக்கும். ரத்த அழுத்தத்தை ஒரே சீராய் வைத்துக்கொள்ள மருத மரம் நமக்கு வழிகாட்டுகிறது.

மருதமரப் பட்டை 200 கிராம்

சீரகம் 100 கிராம்

சோம்பு 100 கிராம்

மஞ்சள் 100 கிராம் இவற்றை ஒன்றாகத் தூள்செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவில் எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்யவும். இதை அதிகாலை, மாலை இருவேளையும் சாப்பிட்டுவர, ரத்த அழுத்தம் இருந்த சுவடே இல்லாமல் மறையும்.

💹💹💹💹💹

நமது வாழ்வியலில் இயற்கைக்கு என தனி மகத்துவம் உண்டு அதனை பேணி காத்தோமேயானால் நிச்சயம் நமது வாழ்வானது சிறக்கும். இன்று உலகை அச்சுறுத்தும் கொரானா போன்ற கொள்ளை நோய்கள் எல்லாம் நம் நாட்டு வாயிலில் கூட நின்றிருக்காதுபழமையை  காத்து புதுமையாக வாழும் பொழுது வாழ்கையானது என்றும் ஆரோக்கியமும் அதில் இருந்து மகிழ்ச்சியும் பொழ்ங்கும். நமது அன்றாட வாழ்வியல் குறைகள்தான் நம்மை இப்படி அவசர கதியில் ஓட வைக்கின்றது அதனை உணர்ந்து கொண்டு நமது அசுர வேகத்தில் மரந்து  போன பழைய வாழ்க்கையை மீண்டும் திரும்ப முயற்சிப்போம்

💹💹💹💹💹

கட்டுரை: சத்திய பிரியா

💹💹💹💹💹

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

💹💹💹💹💹

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🦚🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி :பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.              

💹💹💹💹💹

செல் நம்பர்  7598258480,  6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

💹💹💹💹💹

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH :9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...