✍️கவிதை✍️ உலகக் கவிதை நாள்✍️ இரஞ்சிதா தியாகராஜன்
செக்கச்சிவந்த கதிரவன்...
குளத்தின் மேல் விழுந்து கொஞ்சி காதல் கொள்ளும்...
அழகிய இயற்கை காட்சி
என் பேனா உலகிற்கு எடுத்துரைக்கும் ஓர் சாட்சி....
கவிதை
எண்ணங்களை எழுத்தாக...
கனவுகளை கருத்தாக...
காதிதத்தில் என் மனம் கொஞ்சும் தீரா ஆசை
கவிதை

காக்கை கூட வெள்ளை நிறம்....
கழுதைக்கும் பாட்டு பாட அழகாய் வரும் நல்ல குரல் வலம்...
கண்ணுக்கு மை அழகு...
கவிதைக்கு பொய் அழகு....
என்ற வரிகளுக்கு உயிர் கொடுக்கையில்...
அழகாக அனைத்தையும் இரசிப்போம்...
தமிழன்னைக்கு தினந்தோறும் தெவிட்டாத கவிதையை
இன்னமுதாய் படைப்போம்...

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment