Sunday, March 7, 2021

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா-ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு?

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா-ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு?

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் மீண்டும் பலத்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன.

அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் இன்று பாதிப்பு அதிகரித்து உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.70 கோடியைக் கடந்துள்ளது.


கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9.26 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25.98 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2.18 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89 ஆயிரத்து 400-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.



No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...