Sunday, March 7, 2021

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறையின் சார்பாக “பங்கு சந்தையின் செயல்பாடு” கருத்தரங்கம்.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறையின் சார்பாக “பங்கு சந்தையின் செயல்பாடு” கருத்தரங்கம்.

  திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறையின் சார்பாக “பங்கு சந்தையின் செயல்பாடு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் முதலாவதாக வணிகவியல்துறை இயக்குநர் முனைவர் இரா. மதிவாணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றதுடன் சிறப்பு விருந்தினரையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் முனைவர் திரு.அ.ரா.பொன் பெரியசாமி அவர்கள் தலைமையேற்று உரையாற்றிய பொழுது, பங்கு சந்தையின் இன்றைய நிலை மற்றும் அவற்றிலுள்ள வேலைவாய்ப்புகள் பற்றி கூறியதுடன், மாணவர்கள் தங்களை வேலைவாய்ப்பு பெரும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென கூறினார். அதனைத் தொடர்ந்து இக்கல்லூரியின் தலைவர் பொறியாளர்  திரு.பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அப்பொழுது பங்கு சந்தைகளின் இன்றைய நிலை, பங்கு சந்தைகளில் பங்குகள் வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து இக்கல்லூரியின் செயலர் திரு.பொன்.இரவிச்சந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கும் பொழுது இது போன்ற பயனுள்ள பல்வேறு கருத்தரங்கங்கள் மற்றும் பயிற்சி பட்டறைகள் என மாணவர்களுக்கு பயனளிக்கும் செயல்பாடுகளை ஏற்பாடு செய்ய வேண்டுமென கூறினார். மேலும் ஒருங்கிணைப்பாளர் திரு. முனைவர் எம்.மீனாட்சி சுந்தரம் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.


 இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் திரு.வி.ஜெ.வேல்முருகன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் பங்குசந்தையின் நடைமுறைகள், பங்கு சந்தையில் பங்குகளின் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது, பங்கு சந்தையில் இடைத்தரகர்களின் பங்களிப்பு, பொது மக்கள் எவ்வாறு எப்பொழுது என்ன விலையில் பங்குகளை வாங்க வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிட்டார். மேலும் பங்கு சந்தையின் செயல்பாடுகளில் இந்திய பங்கு பரிமாற்ற வாரியம் (SEBI) மற்றும் இந்திய மைய வங்கியின் (RBI)பங்கு என்ன? என்பதைத் தெளிவாக விளக்கினார் .இந்நிகழ்ச்சியில் 25௦ க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துக் கொண்டு பயனுற்றனர்.


 இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறை இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர் .இறுதியாக வணிகவியல் துறை பேராசிரியை   செல்வி.பு.புவிஷ்மி அவர்கள் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

        Video Link <<<---Click 



No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...