✍️கவிதை✍️ மகளிர் தினம்✍️ இரஞ்சிதா தியாகராஜன்
அதிசய பிறப்பாய்....
அகிலத்தில் இரு முறை உயிர் தரிப்பாய்....
கருவில் கால் உதைத்து.... மகளாய்
குழந்தையின் கால் உதை பொறுத்து.... மகத்தான அன்னையாய்....
அக்னிச் சிறகாய்.... அநீதி நடக்கையில்
அன்பின் வடிவாய்....
அன்றாட குடும்ப வாழ்க்கையில்....
பாசமான தந்தை, உடன்பிறப்புகள் அணைக்கையில்....
கொதித்து எழுவாய்.....
கொடூர ஆண்மகனின் இச்சைக்கு இறையாகையில்....
வீரத்தில்.....
ஆயிரம் அம்புகள் எய்வாய் இரு விழிகள் இரண்டும்....
வீர மகளே!!!!!
அடுப்பூதும் காலமோ போச்சி...
விண்ணை என்றோ தொட்டாச்சி...
இன்னும் எழு முயற்ச்சிகளோடு....
சிறப்பாய் திறக்கட்டும் வெற்றிக் கதவுகள் நூறு...
✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment