Sunday, March 14, 2021

✍🏻⛩️⛩️இயற்கை வாழ்வியல் முறை⛩️⛩️தண்ணீர்விட்டான் கிழங்கின் நன்மைகள்.

✍🏻⛩️⛩️இயற்கை வாழ்வியல் முறை⛩️⛩️தண்ணீர்விட்டான் கிழங்கின் நன்மைகள்.


⛩️⛩️⛩️⛩️⛩️

தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50கிராம் எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு வேளை இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.

⛩️⛩️⛩️⛩️⛩️

மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.

⛩️⛩️⛩️⛩️⛩️

கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும் படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும் குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்

 ⛩️⛩️⛩️⛩️⛩️

தண்ணீர்விட்டான் கிழங்கு பானம்: பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். இதனால், இளைத்த உடல் பெருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமாகும்.

நீரிழிவு நோயை குணப்படுத்தும் தண்ணீர் விட்டான் கிழங்கு!! அதில் உள்ள அளப்பரிய  மகத்துவங்கள்!! - Seithipunal

வேர்க்கிழங்குகள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்யும். இவை, சேகரிக்கப்பட்டு மருத்துவத்தில் பயன்படுகின்றன. காய்ந்த நிலையில் இவை நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்.

⛩️⛩️⛩️⛩️⛩️

தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடியைப் பாலில் கலந்து குடித்துவந்தால் உடல் உஷ்ணம், வெட்டைச் சூடு குணமாகும்.

⛩️⛩️⛩️⛩️⛩️

உடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூள் இரண்டு கிராம் அளவு, பசு நெய்யில் கலந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர வேண்டும்.

 ⛩️⛩️⛩️⛩️⛩️

ஆண்மை பெருக தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்துகொண்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள், ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வர வேண்டும்.

⛩️⛩️⛩️⛩️⛩️

குளிர்ச்சித்தன்மையைக் கொண்டுள்ளதால், வேனிற் காலங்களில் இதன் கிழங்கைப் பொடி செய்து, பாயச வகைகளில் சேர்த்துப் பருகலாம். உடலை வளர்க்கும் இனிப்புச் சுவையுடைய தண்ணீர்விட்டான் கிழங்கு, வெப்பக் காலங்களில் உடல் இழந்த நீர்ச்சத்தை மீட்டுக் கொடுக்கும்.

பெண்களின் முன்அழகை மேம்படுத்தும் தண்ணீர் விட்டான் கிழங்கு || Thaneervittan  Kilangu medical benefits

⛩️⛩️⛩️⛩️⛩️

கிழங்கை உலர வைத்துப் பொடி செய்து தினமும் பாலில் கலந்து பருக, சந்தையில் கிடைக்கும் ஊட்டச்சத்துப் பானங்கள் கொடுக்காத பலன்களையும் பெறலாம். ‘நீரிழிவைப் போக்கும்… வெண்ணீர்பெய் சோம நோய்…’ எனும் தண்ணீர்விட்டான் சார்ந்த சித்தர் அகத்தியரின் பாடல், நீரிழிவு நோய்க்கு இதன் கிழங்கு நல்ல மருந்து என்பதைப் பதிவு செய்கிறது.

⛩️⛩️⛩️⛩️⛩️

இதன் சாற்றோடு தேன் சேர்த்துக் கொடுக்க, செரிமானப் பாதையில் உண்டாகும் பிரச்சினைகள் நிவர்த்தியாகும்

⛩️⛩️⛩️⛩️⛩️

கட்டுரை: ஆ.வீ. முத்துப்பாண்டி

⛩️⛩️⛩️⛩️⛩️

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

⛩️⛩️⛩️⛩️⛩️

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🦚🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி .             

⛩️⛩️⛩️⛩️⛩️

செல் நம்பர்   7598258480, 6383487768

((வாட்ஸ் அப்))  7598258480

⛩️⛩️⛩️⛩️⛩️

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...