Monday, April 12, 2021

12ஆம் வகுப்பு மொழிப்பாட தேர்வு மாற்றம்

 12ஆம் வகுப்பு மொழிப்பாட தேர்வு மாற்றம்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 12ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை ஆலோசனை மேற்கொண்டது.

இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ஆம் தேதி நடைபெற இருந்த மொழிப்பாட தேர்வு மே 31ஆம் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. மட்டும் மாற்றம்மேலும், இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது தேதிகளில் நடைபெறும் எனவும், தேர்வுகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி நடக்கும் எனவும் பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மே 3ஆம் தேதி தொடங்கி மே 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மொழிப்பாட தேர்வு மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியிடப்படும் நிலையில் 12ஆம் வகுப்பின் மே 3ஆம் தேதி நடைபெற இருந்த மொழிப்பாட தேர்வு மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.



No comments:

Post a Comment

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம். நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளியில் ஓர் பயணம் என்ற கருத்தர...