Saturday, April 3, 2021

✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🦤🦤தும்பை பூவின் நன்மைகள்.

✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🦤🦤தும்பை பூவின் நன்மைகள்.

🦤🦤🦤🦤🦤

தும்பைப்பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தீராத தலைவலி மற்றும் ஜலதோஷம் போக்கும் தன்மை இந்த தும்பைப் பூக்களுக்கு உண்டு.

🦤🦤🦤🦤🦤

ஜலதோஷம் தும்பையின் பூவை பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும்.

🦤🦤🦤🦤🦤

தலைவலி குணமாக குணமாக

தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.

🦤🦤🦤🦤🦤

தலைவலி போக்கும் சாறு

தீராத தலைவலியால் அவதிப்படுபவர்கள் பத்து தும்பைப்பூக்களை பறித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து இரண்டு துளிகள் மூக்கில் விட்டு உறிஞ்சினால் தீராத தலைவலி நீங்கும்.

🦤🦤🦤🦤🦤

காய்ச்சல் குணமாக

சகலவிதமான காய்ச்சலுக்கும் தும்பைப்பூ அருமருந்தாகும். ஒரு டீஸ்பூன் தும்பைப்பூ சாறுடன் சம அளவு தேன் சேர்த்து தினம் இரு வேளை கொடுத்து வர காய்ச்சல் குணமடையும்.

🦤🦤🦤🦤🦤

சளியினால் மூக்கில் ரத்தம் வடிதல்

சளியினால் மூக்கில் ரத்தம் வந்து கொண்டிருக்கும் நிலையிலும் தும்பைப்பூ, இலை, சமஅளவு எடுத்து கசக்கி அதில் சாறு எடுத்து 2 துளிகள் தினமும் இருவேளை மூக்கில் விட எளிதில் குணம் தெரியும்.

🦤🦤🦤🦤🦤

வாதம் குணமடையும்

கால் டீஸ் பூன் அளவு மிளகை பொன் வறுவலாக வறுத்து எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் அளவு தும்பைப்பூவும், சிறிதுவெல்லமும் சேர்த்து லேகியம் போல செய்து தினம் இருவேளை சாப்பிட குளிர் ஜுரம், வாதஜுரம் குணமடையும்.

தும்பை பூ மருத்துவ பயன்கள்- thumbai poo health benefits Tamil

🦤🦤🦤🦤🦤

சொறி, சிரங்கு குணமாக

தேவையான அளவு தும்பைப் பூவையும், தும்பை இலையையும் சேகரித்து அரைத்து சிரங்கு மேலும் உடலில் அரிப்பு இருந்தால் உடல் முழுவதும் தடவிவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடவேண்டும். பிறகு சுட்ட சீயக்காய் மற்றும் மஞ்சளை அரைத்து அதைத் தேய்த்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.

🦤🦤🦤🦤🦤

இருமல் – சளி தொல்லை நீங்க

சிறிதளவு தும்பைப் பூக்களைப் பறித்து, நன்கு அலசிவிட்டு வெறும் வாயில் போட்டு மென்று தின்றால் இருமல், சளி தொல்லை உடனடியாக நீங்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.

🦤🦤🦤🦤🦤

கடுமையான நீர் கோர்வை நீங்க

சிறிதளவு தும்பைப் பூக்களை எடுத்து, ஒரு தமிழா தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து சாற்றினை வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் பனங்கற்கண்டு கலந்து குடித்தால் கடுமையான நீர்க்கோவை நீங்கும்.

🦤🦤🦤🦤🦤

தொண்டை கட்டு நீங்க

சிறிதளவு தும்பைப் பூ தேன், மிளகுத்தூள் சேர்த்து இருநாட்களுக்கு காலையும் மாலையும் சாப்பிட அடுக்குத் தும்மல், தொண்டைக்கட்டு நீங்கும்.

தும்பை மூலிகையின் மருத்துவப் பயன்கள் - Medicare benefits of hammer herb |  பெமினா தமிழ்

🦤🦤🦤🦤🦤

தலைநோய் தும்பைப்பூ தைலம்

தும்பைப்பூவை சுமார் 50 கிராம் அளவில் சேர்த்து இரண்டு ஆழாக்கு நல்லெண்ணெயில் போட்டு தைலமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இந்தத் தைலத்தை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் ஒற்றைத் தலைவலி, தலைபாரம், தலை நீரேற்றம், மூக்கடைப்பு ஆகியன நீங்கும்.

🦤🦤🦤🦤🦤

மூக்கடைப்பு மூக்கில் சதை நீங்க

உலர்ந்த தும்பைப் பூ 50 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், ஓமம், பூண்டு, சித்தரத்தை ஆகியவை தலா 10 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்

அனைத்தையும் நன்றாக இடித்து, கால் லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ளவும். மூக்கடைப்பு தோன்றும்போது இந்த எண்ணெயில் 2 துளிகள் மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும். மூக்கில் சதை வளர்ந்திருந்தாலும் மறையும்.

🦤🦤🦤🦤🦤

இருமல் – சளி தொல்லை நீங்க

சிறிதளவு தும்பைப் பூக்களைப் பறித்து, நன்கு அலசிவிட்டு வெறும் வாயில் போட்டு மென்று தின்றால் இருமல், சளி தொல்லை உடனடியாக நீங்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.

🦤🦤🦤🦤🦤 தும்பைப்பூ, ஏலக்காய், அக்கரகாரம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை தேனில் குழைத்து சிறிது சிறிதாக வாயில் போட்டு வைத்திருந்தால் குரல் கம்மல், தொண்டைக்கட்டு நீங்கும்.

🦤🦤🦤🦤🦤

கபம் கரைய ஆஸ்துமா கட்டுப்பட

ஒரு கைப்பிடி அளவு தும்பைப்பூவை எடுத்துக் கொள்ள வேண்டும் அதனுடன் 10 மிளகு, 100 கிராம் தேங்காய்த் துருவல், 2 பச்சை மிளகாய் எடுத்து அனைத்தையும் சிறிதளவு நெய் விட்டு வதக்கி அரைத்து தினமும் ஒருவேளை துவையலாகச் சாப்பிட்டு வந்தால் மார்பிலுள்ள சுபம் கரைந்து வெளியேறும்ஆஸ்துமா நோயும் கட்டுப்படும்

🦤🦤🦤🦤🦤

பின் குறிப்பு இதில் சில வைத்தியங்களை செய்வும் முன் மருத்துவர் ஆலோசனை பெற்று பின் செய்யவும்

கட்டுரை ஹரிஹரன்

🦤🦤🦤🦤🦤

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🦤🦤🦤🦤🦤

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர்,🚍 ஈரோடு  மாவட்டம்,பவானி.

செல் நம்பர்  7598258480

((வாட்ஸ் அப்))  7598258480

🦤🦤🦤🦤🦤

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...