✍🏻🪆🪆இயற்கை வாழ்வியல் முறை🪆🪆இயற்கையும் மனிதனும்.
🪆🪆🪆🪆🪆
ஒரு சராசரி மனிதனின் இதயம் ஒரு நாளுக்கு 1,03,689 முறை துடிக்கிறது. அவனுடைய ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல்கள் பயணம் செய்கிறது. அவன் 70,00,000 மூளை செல்களைப் பயிற்றுவிக்கிறான். 438 கனஅடி காற்றை உள்ளே இழுக்கிறான். 23,000 தடவை சுவாசிக்கிறான். 750 தசைகளை அசைக்கிறான். ஒன்றரைக் கிலோ உணவை உட்கொள்கிறான். ஆனால் இத்தனையையும் செய்வதில் அவனுக்குக் களைப்போ, தளர்ச்சியோ ஏற்படுவதில்லை. காரணம் இவை எல்லாம் அவன் முயற்சியில் நடப்பதில்லை. தன்னிச்சையாகவே நிகழ்கின்றன.
🪆🪆🪆🪆🪆
இந்தச் செயல்கள் ஒவ்வொன்றையும் மனிதன் தானாக பிரக்ஞையோடு செய்ய வேண்டுமென்றால் மனிதன் ஒரு நாள் கூட வாழ முடிவது சந்தேகமே. அவனுக்குள்ளே இயற்கையாகவே இருக்கும் ஒரு கிரியா சக்தி இவை அனைத்தையும் பார்த்துக் கொள்கிறது. அனைத்தையும் சீராகவும், ஒழுங்கு முறையுடனும், தொடர்ந்தும் இவை நடக்கும்படியே அவன் படைக்கப்பட்டு இருக்கிறான்.
🪆🪆🪆🪆🪆
இயற்கையாக நடக்கும் இந்த செயல்களில் குளறுபடி இல்லாமல் போக இன்னொரு முக்கிய காரணம், இயற்கை தன் செயல்களை அடுத்தவருக்காகவோ, சாதனை புரிந்து காட்டுவதற்காகவோ, போட்டிக்காகவோ செய்வதில்லை. எதெல்லாம் அவசியமோ அதை மட்டுமே சீராக இயற்கை செய்கிறது. இன்னொரு இதயம் நூறு முறை அதிகம் துடிக்கிறது, நானா சளைத்தவன் இதோ இருநூறு முறை அதிகம் துடித்துக் காட்டுகிறேன் என்று எந்த இதயமும் போட்டி போட்டு துடிப்பதில்லை. அடுத்த மனிதனுடைய ரத்த ஓட்டத்தை விட ஆயிரம் மைல் அதிகம் நான் ஓடிக் காட்டுவேன் எந்த மனிதனுடைய ரத்த ஓட்டமும் வேகம் அதிகரித்துக் காட்டுவதில்லை.
🪆🪆🪆🪆🪆
இன்னொரு முக்கிய காரணம், தன் செயல்களை இயற்கை பெரிதாக நினைப்பதோ, அதனால் சலிப்படைவதோ இல்லை. தொடர்ந்து நூறு நாள் துடித்தாயிற்று, நான் என்ன எந்திரமா?, இரண்டு நாள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து இதயம் இயங்க முரண்டு பிடிப்பதில்லைஅது சக்தியுள்ள காலம் வரை தன் வேலையை ஒழுங்காகச் செய்ய முடிவது அதனாலேயே.
🪆🪆🪆🪆🪆
இயற்கை மனித உடல் இயக்கத்தில் இத்தனை சாதனைகளை சத்தமில்லாமல், ஆர்ப்பாட்டமில்லாமல் செய்கிறது. அவனாக அவன் பழக்க வழக்கங்களாலும், தவறான உணவுப் பழக்கங்களாலும் அந்த உடலைப் படாதபாடு படுத்துகிறான். அந்த உடலுக்குத் தேவையானதைத் தராமல், தேவையில்லாததைத் திணித்து அதன் எல்லா செயல்பாட்டுக்கும் ஏகப்பட்ட இடைஞ்சல்கள் செய்கிறான். அத்தனையையும் சமாளித்துக் கொண்டு அது முடிந்தவரை ஒழுங்காக இயங்கப் பாடுபடுகிறது.
🪆🪆🪆🪆🪆
மனிதன் தன் உடல் இயக்கத்தில் இருந்தே ஏராளமான பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஒழுங்குமுறை, சலிப்பின்மை, எல்லாத் தடைகளையும் மீறி சிறப்பாகச் செயல்படுதல் போன்றவை அந்தப் பாடங்களில் அடங்கும். இயற்கையின் செயலில் அவசரமில்லை அதே நேரத்தில் தேக்கமும் இல்லை. தேவையானதை தேவையான வேகத்தில் செய்கிறது. இதுவும் மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம். மனிதன் இயற்கையைப் பின்பற்றுவது முடியாத காரியம் அல்ல. ஏனென்றால் அவனும் இயற்கையின் படைப்பே. இயற்கையோடு ஒட்டியும் தன் இயல்பை உணர்ந்தும் செயல்பட்டால் அவன் அடைய முடியாத சிறப்பில்லை.
🪆🪆🪆🪆🪆
இயற்கை இது வரை படைத்த பல்லாயிரக் கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவர் போல் இன்னொருவரைப் படைத்ததில்லை. இது பிரமிப்பூட்டும் உண்மை. சமூகம் தான் சில சமயங்களில் எல்லோரையும் ஒரே வார்ப்பில் வார்த்து விடும் முயற்சியில் ஈடுபட்டு மனிதர்களைக் குழப்புகிறதே ஒழிய இயற்கை அந்த முட்டாள்தனத்தை இது வரை செய்ததில்லை.
🪆🪆🪆🪆🪆
இயற்கையின் தனிப்பட்ட முத்திரை தனித்தன்மையே. இயற்கை மனித உடல் இயக்கங்களை ஒரே போல் உருவாக்கி இருந்தாலும் மற்ற விஷயங்களில் தன் தனி முத்திரையைப் பதித்தே அனுப்புகிறது.
🪆🪆🪆🪆🪆
ஒவ்வொரு மனிதனும் இயங்கத் தேவையான நுண்ணறிவை அவன் உடலுக்குத் தன்னிச்சையாக ஏற்படுத்தி உலகிற்கு அனுப்பி இயற்கை தன் பங்கைக் கச்சிதமாகச் செய்து விடுகிறது. இங்கு வந்த பின் வாழ வேண்டிய தன் பங்கை மனிதன் அதே கச்சிதத்துடன் செய்ய ஆறறிவையும் தந்து உதவியிருக்கிறது. அவனுக்குள்ளே தனித் திறமைகளையும் ஏற்படுத்தி அவன் பிரகாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. மனிதன் பிரகாசிப்பதும், மங்கிப் போவதும் அவன் அந்தத் திறமைகளைப் பயன்படுத்தி வாழும் விதத்தில் தான் தீர்மானமாகிறது.
🪆🪆🪆🪆🪆
இயற்கையை ஒட்டி மனிதன் வாழும் போது, தெளிவாக ஆழ்ந்து சிந்திக்கும் போது தனக்குள்ளே இருக்கும் தனிச்சிறப்புகளை மனிதன் உண்மையாக உணர்கிறான். அப்படி உணரும் போது அதை வெளியே கொண்டு வர என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முற்படுகிறான். விதைக்குள் இருக்கும் செடி வெளியே வராமல் வேறெங்கு போகும்? அவனாகவே அலட்சியப்படுத்தி அழிக்காத வரை எந்த திறமையும் அழிந்து போவதில்லை.
🪆🪆🪆🪆🪆
சரி இயற்கையை ஒட்டியோ, பின்பற்றியோ வாழ்கிற விதம் தான் என்ன? அதற்கு அடையாளங்கள் தான் என்ன? உங்கள் லட்சியங்கள் உங்கள் இயற்கையான இயல்பை ஒத்து இருப்பது, அவற்றில் ஈடுபடும் போது சலிப்பு தோன்றாமல் இருப்பது, அடுத்தவனுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதை விட இதை நான் சாதித்து விட வேண்டும் என்ற எண்ணம் பிரதானமாக இருப்பது, சில்லறை அசௌகரியங்களைப் பெரிது படுத்தி குற்றச்சாட்டுகளைத் தயார் செய்வதை விட அதிகமாக அவற்றை நீக்கும் வழிகளை ஆராய்வது, அடுத்தவர்கள் சாதனைகளில் வயிறெரியாமல் இருப்பது, தன்னைப் போலவே அடுத்தவர்களையும் மதிப்பது, அடிக்கடி மனநிறைவை உணர்வது, விடாமுயற்சியுடன் உற்சாகமாக உழைப்பது இதெல்லாம் சில அடையாளங்கள்.
🪆🪆🪆🪆🪆
கருவறை முதல் கல்லறை வரை வாழ்வியல் முறைகள்அனைத்தும் இயற்கையை சார்ந்தே அமைந்து இருந்தது. நிலம், நீர், காற்று என அனைத்தையும் கடவுளாக வைத்து வழிபட்ட, நமது முன்னோர்கள் ஆலமரம், அரசமரம், வேப்பமரம், வில்வம் என கோவிலுக்கு ஒரு மரத்தை வைத்து ஸ்தல விருட்சமாக வணங்கி விழா எடுத்தனர். கதைகளும், காவியங்களும் அதை ஒட்டியே எழுதப்பட்டன. மரங்களே மழையின் விதைகள் என்பதை உணர்ந்த நமது முன்னோர் காடுகளை காப்பாற்றி தலைமுறையை வாழ்வித்தனர். சுகாதாரமான மேம்பட்ட சூழலில் இயற்கையுடன் இணைந்தே வாழ்ந்தனர்.
🪆🪆🪆🪆🪆
ஆனால் நாகரீக வளர்ச்சியிலும், பொருளாதார தேவையின் பொருட்டும் மனிதன் கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்து நகர பகுதிக்கு வந்தான். கால மாற்றத்திலும், குடும்பச் சூழலிலும் இயற்கையுடனான அவனது உறவில் விரிசல் ஏற்பட்டது. மீன் பிடித்து சாப்பிட்ட குளமும், ஏரியும், கண்மாயும் நீரில்லாமலும், மணல் இல்லாமலும் சூழல் மாறுபாட்டில் சுடுகாடுகளாக மாறிவிட்டன. கடைமடை வாய்க்கால் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து விட்டது. உலக விஞ்ஞானிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலமுறை எச்சரித்த பின்பு தற்போது, அரசும் சூழல் காக்கும் திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக் பைகள் தடையும், தூய்மை இந்தியா திட்டமும் அதற்கு ஒரு முன்னோட்டமாக எடுத்து கொள்ளலாம்
🪆🪆🪆🪆🪆
ஒரு தனி நபரின் பொருளாதார வளர்ச்சிக்காக இயற்கையை சிதைத்தல் தவிர்க்கப்படவேண்டும். எந்திர மயமாதலும், புகையும், இரைச்சலும் சிட்டுக்குருவிகள், பூச்சிகளை மட்டுமல்ல நம்மையும் பாதித்து வருகின்றன. மனித தேவைகளை தாண்டி இப்போது விளம்பர திருப்தியே மாசு படிந்த உலகத்தை உருவாக்கி மாய சமூகத்தை உருவாக்கியுள்ளது. நாம் செயற்கை மீது பேராசை பட்டு உயிர் மண்டலத்தை சிதைத்து விட்டோம். ஏறக்குறைய நாம் உலக இயற்கையை முழுவதுமாகவே ஆக்கிரமித்து பயன் படுத்தி விட்டோம்.
🪆🪆🪆🪆🪆
காடுகள் மழையை தருவதுடன் மண் அரிப்பினைத்தடுக்கிறது. பூமியின் தட்ப வெப்பநிலையையும் பாதுகாத்து மழை தரும் கடவுளாக உள்ளது. மனிதனை தாக்கும் நோய்க்கான மருந்துகளில் 75 சதவீதம் காடுகளில் இருந்தே கிடைக்கின்றது. பெருகி வரும் மக்கள் தொகையும், மனிதனின் கலாச்சார மாற்றமும் தான் இயற்கையின் இடர்பாடுகளுக்கு காரணம். உணவு முறை மாற்றத்தால் சத்தான நமது அரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு ,தினை குறைந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பீட்சா, புரோட்டா என மைதாவில் தயாரிக்கப்படும் உணவுமுறைகள் அதிகரித்தது விட்டன. சில இடங்களில் இயற்கை அங்காடிகள் மூலம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், உணவுபொருட்கள் விற்பனை தொடங்கியுள்ளது, நல்ல மாற்றமாகும்.
🪆🪆🪆🪆🪆
இயற்கையை பாதுகாப்பதற்கு தொழில் ரீதியான உற்பத்தியை குறைக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் மாசுபடுத்தாத வழிகளை பயன்படுத்த வேண்டும், இதனால் இயற்கை பாதுகாப்புடன் மனித தேவையும் பூர்த்தியாகும் மனிதனும் இயற்கையும் சீரான இடைவெளியில் ஒரு ரெயில் தண்டவாளம் போல இணைந்திருப்பது தான் சமூகத்திற்கும் நமக்கும் நல்லது. இயற்கையை பாதுகாத்து நாட்டை காப்பதுடன் நாமும் இனிமையாக வாழ்வோம்.
🪆🪆🪆🪆🪆
கட்டுரை: உமா, ஆசிரியர், கள்ளக்குறிச்சி
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚🦚
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்
🦚🦚🦚🦚🦚
நன்றி : பெருசங்கர், 🚍 ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P.RAMESH: 9750895059.
No comments:
Post a Comment