Wednesday, April 21, 2021

இருசக்கர வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் : உயர்நீதிமன்றம் அதிரடி.

இருசக்கர வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் : உயர்நீதிமன்றம் அதிரடி.

இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் போதே கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013இல் பஸ் மோதிய விபத்தில் பெண் பல் மருத்துவர் 90% ஏற்பட்டதில் கூடுதல் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரபாகரன் அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்க அதிவேகமே காரணம் என்று கூறினார்.

இதற்காக இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் போது வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பைக்கிற்கும் வேகக் கட்டுப்பாட்டு  கருவி பொருத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். வேக கட்டுப்பாடு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் வாகனங்களை தயாரிக்கும் போதே கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.



No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...