Thursday, April 29, 2021

✍🏻🌷🌷இயற்கை வாழ்வியல் முறை 🌷🌷என்றும் நலமுடன் வாழ...

✍🏻🌷🌷இயற்கை வாழ்வியல் முறை 🌷🌷என்றும் நலமுடன் வாழ...

🤖🤖🤖🤖🤖

நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது சத்தான உணவு, எளிதில் சீரனமாகும் உணவு அழகை பாதுக்காக்கும் உணவு இந்த மூன்றையும் தனித்தனியாக சாப்பிடுவதை காட்டிலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவில் இந்த மூன்று தன்மையும் இருப்பது ஒரே கல்லில் மூன்று மாங்காய் கிடைத்ததை போன்றதாகும்.

நம் முன்னோர்கள் இவை மூன்றிற்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து தான் வாழ்ந்திருக்கிறார்கள் வாருங்கள் நினைவுபடுத்துவோம் நாம் மறந்து போன பாரம்பரிய ஆரோக்கிய வாழ்க்கை முறையை

🤖🤖🤖🤖🤖

இரவு உறக்கம்

உறக்கம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருந்தாலும் பலர் சரியான நேரத்திற்கு அமைதியாக உறங்குவதில்லை. நமது உடல் உழைப்பிற்கேற்ற உறக்கம் கட்டாயம் தேவை. இரவு மிதமான உணவு உண்ட பின்னர் கொஞ்ச நேரம் வெளியில் நடை போட்டுவிட்டு தூங்குவது உங்களது அடுத்த நாளை புத்துணர்வுடன் தொடங்க உதவும்.

அதிகாலையில் எழ வேண்டும்

காலையில் 5 மணி முதல் 6 மணிக்குள் எழுந்திருப்பது சிறந்தது. இது மன மற்றும் உடல்நலத்தை மேம்படுத்தும். காலையில் எழுந்தவுடன் தண்ணீர், வெந்நீர், கருப்பட்டி காபி, வடித்த கஞ்சி, நீராகாரம் ஆகியவற்றை அருந்துவது மிகவும் நல்லது.

வீட்டில் செல்வம் பெருக நீங்கள் காலையில் இதை மட்டும் செய்தால் போதும்!! |  Wonderful benefits of awaken in Early Morning - Tamil BoldSky

🤖🤖🤖🤖🤖

உடற்பயிற்சி

தினமும் காலையில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, 15 நிமிடங்கள் யோகாவும் தியானமும், 5 நிமிடங்கள் மூச்சு பயிற்சி ஆகியவற்றை செய்வது உடலை பலமாக்கி புத்துணர்வை அள்ளி தரும்.

காலையில் நீராகாரம்

நமது மூதாதையர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் வாழ காரணம் அவர்கள் காலையில் பருகிய நீராகாரம் தான். மிதமான சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் பருகுவது சிறந்தது

காலை கடன்

காலை கடனை காலையிலேயே முடிப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால் இது பல நோய்களுக்கு வழிவகுக்கும். மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்தில் பல சிக்கல்கள்களை உண்டாக்கும்

🤖🤖🤖🤖🤖

பற்கள் ஆரோக்கியம்

செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயில் பல் துலக்குவதற்கு முன்பாக வாய் கொப்பளிப்பது சிறந்தது. அதன் வழவழப்பு தன்மை போகும் வரை கொப்பளித்து துப்பி விட வேண்டும். இவ்வாறு செய்வது ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வாய் துர்நாற்றம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றும்.

பற்பொடி

வாரம் இருமுறையாவது பற்பசைகளை தவிர்த்து பற்பொடியை உபயோகிக்கலாம்ஆலம் விழுதுப் பொடி, பட்டை, எலுமிச்சை தோலை காயவைத்து கருக்கிய கரி, கல் உப்பு, கிராம்பு, வேலமரக்குச்சி ஆகியவை அடங்கிய பற்பொடியை தயார் செய்து பயன்படுத்துங்கள். பற்கள் நூறாண்டு காலம் வாழும்

🤖🤖🤖🤖🤖

பற்களுக்கான பயிற்சி

கரும்பை ருசிப்பது சீடை, முருக்குகளை மெல்வது, கேரட், கொய்யாவைக் கடித்து சாப்பிடுவது போன்றவை பற்களின் வலிமையைக் கூட்டும் எளிதான பயிற்சிகள் ஆகும்

தினந்தோறும் குளியல்

தினந்தோறும் குளிக்க வேண்டியது அவசியம். உச்சி முதல் பாதம் வரை முழுவதும் தண்ணீரால் நனைய வேண்டியது அவசியம். இதற்கு பெயர் தான் குளியல் உடல் மட்டும் நனைவதற்கு பெயர் குளியல் அல்ல.

வாரத்தில் இருமுறை உச்சந்தலையிலும் உள்ளங்காலிலும் சூடுபறக்க எண்ணெய் தேய்ந்து சிறிது நேரம் வெயிலில் நின்று, அரப்பு தேய்த்து வெந்நீரில் குளிப்பது நல்லது. இதனால் தோல், கண், காது, மூக்கு தொடர்பான நோய்கள் நம்மை அண்டாது. எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய் உகந்ததாக இருக்கும்.

குளியல் நேரம் | Bathing Astrology Tips | Kuliyal

🌞🌞🌞🌞🌞

நலங்கு மாவு

குளிக்கு சோப்பு பயன்படுத்துவதை விட பாசிப்பயிறு, கோரைக்கிழங்கு, பூலாங்கிலங்கு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கார்போக அரிசி சோர்த்து பொடித்த நலங்குமாவு சிறந்தது. எப்போதும் பயன்படுத்தாவிட்டாலும் இதனை அடிக்கடி பயன்படுத்தலாம்

ஹெல்தி நொறுக்கு தீனி

முளைக்கட்டிய பச்சைப் பயிறும் கறுப்பு சுண்டலும் சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிட வேண்டியது அவசியம். இது ஒரு ஹெல்தியான நொறுக்கு தீனியாக இருக்கும்.

🤖🤖🤖🤖🤖

பாரம்பரிய அரிசி

தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை தவிர்த்துவிட்டு, பாரம்பரிய அரிசி வகைகளுக்கு மாறுங்கள். சிறுதானியங்களை தாராளமாக உண்ணுங்கள். ஒருவேளை உணவிலாவது சிறுதானியம் இருக்க வேண்டியது அவசியம்.

மறந்து போன சில உணவுகள்

காரத்திற்காக மிளகாயை உபயோகிப்பதை விட மிளகை உபயோகிப்பது சிறந்தது. மிளகு ஆரோக்கியம் மட்டும் அல்ல. சுவையையும் தருகிறது.

கொடம்புளி என்பது நமது பாரம்பரிய சமையலில் இடம்பிடித்த ஒரு சூப்பரான பொருள். இது உடலில் கொழுப்பை கரைத்து உடலை மெலிய வைக்கும். அரேபிய நாட்டு புளியை சமையலறையிலிருந்து துரத்திவிட்டாலே பல நோய்களும் வெளியேறிவிடும். கேழ்வரகு, திணை, வரகு, கம்பு, வெள்ளைச் சோளம், சாமை, குதிரைவாலி, பனிவரகு, காடைக்கண்ணி ஆகியவை அடிக்கடி நமது மெனுவில் இடம் பெற வேண்டியது அவசியம்.

வேண்டாம் வெள்ளை சக்கரை

அழகுக்காக வெள்ளை சக்கரையை பயபடுத்தலாம். ஆனால் ஆரோக்கியத்திற்கு இது சற்றும் உகந்தல்ல. சத்துக்கள் நிறைந்த வெல்லம், கருப்பட்டி (பனை வெல்லம்), பனங்கற்கண்டு, தேன் ஆகியவை உடல்நலத்தை மேம்படுத்த உதவுகிறது.

🤖🤖🤖🤖🤖

உடலுழைப்பு இல்லாதவர்களுக்கு தேனீர்

உடலுழைப்பு இல்லாதவர்களுக்காக இந்த சுவையான தேனீர் உதவுகிறது. கரிசாலை இலை, முசுமுசுக்கை இலை, தூதுவளை இல்லை, சீரகம், பசும்பால் அல்லது நீர் இதில் கற்கண்டு சேர்த்து காய்ச்சி எடுத்தால் சுவையான தேனீர் தயார். இதை குடித்து பழகிவிட்டால் பின்னர் இதை நீங்கள் விடமாட்டீர்கள். இதனால் மூளை, நரம்புகள் புத்துணர்வு பெறும். மூளையை ஆயுதமாக பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த தேனீர் ஒரு வரபிஅன்னப்பொடி

🤖🤖🤖🤖🤖

அன்னப்பொடி

மதிய உணவில் சாம்பார் அல்லது புளிக்குழம்பு சாப்பிஅன்னப்பொடியுடன் முதலில் ஒரு வாய் அன்னப்பொடியுடன் சாப்பிட்டுவிட்டு, பிறகு பிடித்ததை சாப்பிடுங்கள் அன்னப்பொடி என்றால் என்னவென்று தெரியவில்லையா மிளகு, திப்பிலி, சீரகம், ஓமம், பெருங்காயம் இந்துப்பு மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வறுத்து அரைத்து தயாரிக்கப்படும் பொடியே அன்னப்பொடி.

இது உணவுப்பாதையில் உள்ள தொந்தரவுகளை நீக்கும். வாய்வுத்தொல்லையை தடுக்கும். கல்லீரலுக்கு நல்லது.

காஷ்மீர் ஆப்பிள், ஆஸ்திரேலியன் ஆரஞ்சு, அயல்நாட்டு பெர்ரிகளை விட நம் ஊரில் விளையும் கொய்யா, மாதுளை, இலந்தை, அத்தி, பப்பாளி, வாழை, நெல்லி, சாத்துக்குடி, கமலாப்ஷ ஆகியவை நல்லது.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🤭🤭🤭🤭🤭 

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

💞💞💞💞💞

நன்றி: பெருசங்கர், ஈரோடு மாவட்டம், பவானி.

செல் நம்பர் 7598258480 

🌻🌻🌻🌻🌻

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...