Wednesday, April 7, 2021

✍🏻🪵🪵இயற்கை வாழ்வியல் முறை🪵🪵மொச்சை கொட்டையின் நன்மைகள்.

✍🏻🪵🪵இயற்கை வாழ்வியல் முறை🪵🪵மொச்சை கொட்டையின் நன்மைகள்.

🪵🪵🪵🪵🪵

இதய ஆரோக்கியம் காக்கும்

மொச்சைக் கொட்டையில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து பொட்டாசியம்போலேட் மற்றும் சபோனின் போன்றவை உள்ளன இந்த ஊட்டச்சத்துகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கவிடாமல் நார்ச்சத்து உதவுகிறது. இதய தமனிகளின் சுவர்கள் அடர்த்தி அதிகரிக்காமல் இருக்க போலேட் உதவுகிறது பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கிறது.

🪵🪵🪵🪵🪵

மலச்சிக்கலைத் தடுக்கும்

மொச்சையில் உள்ள கரையாத நார்ச்சத்து, சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது இதனால் மலச்சிக்கலுக்கான வாய்ப்பு குறைக்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மொச்சைக் கொட்டையை உணவில் சேர்த்து கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்

🪵🪵🪵🪵🪵

புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்

மொச்சைக் கொட்டையில் உள்ள நார்சத்து குடலில் நச்சுப்போருட்களின் வெளிப்பாட்டைக் குறைப்பதன் மூலம் பெருங்குடல் அழற்சியைத் தடுக்கிறது. பெருங்குடல் பகுதியில் புற்று நோய் உண்டாக்கும் ரசாயனங்களைத் தடுக்கிறது மொச்சைக் கொட்டை ஒரு சிறிய அளவு ஜெனிச்டின் மற்றும் டைட்சின் என்னும் ஐஸோஃப்ளவன்களைக் கொண்டுள்ளது. இது மார்பக புற்றுநோயைத் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

🪵🪵🪵🪵🪵

செல்களை புதுப்பிக்கும்

மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த புரதம் உடலுக்கு மிகவும் அவசியம் புரதம் என்பது உடலில் உள்ள அணுக்கள் மற்றும் செல்களின் வளர்ச்சிக்கும் சேதம் ஏற்பட்டால் பழுது பார்க்கவும் தேவையான சத்தாகும்

🪵🪵🪵🪵🪵

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்

மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறையும். 100 கிராம் மொச்சையில் 36 கி நார்ச்சத்து உள்ளது இதனால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கும்.

மொச்சைக்கொட்டை பத்தி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ...  தெரிஞ்சிக்கங்க | Lima Beans Nutrition Benefits And Simple Recipes - Tamil  BoldSky

🪵🪵🪵🪵🪵

பெரும்பாலோனார் மொச்சையை சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும் என்ற காரணத்தினால் ஒதுக்கி வைக்கின்றனர். இது பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது இதனால் மொச்சையை ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதில் மொச்சையை  வேக வைக்கும் போது இஞ்சி பூண்டு சேர்த்து சமைத்தால் வாய்வுத்தொல்லை ஏற்படாது.

🪵🪵🪵🪵🪵

உடலை வளர்க்கும் இனிப்பு சுவை கொண்டது மொச்சை உடலுக்குக் குளிர்ச்சித் தன்மையைக் கொடுக்கக்கூடியது. கோர உட்டிணம் தணிக்கும் என்ற சித்தர் அகத்தியரின் பாடல் வரியின் மூலம், மிகுதியான உடல்சூட்டை மொச்சை குறைக்கும் என்பது தெளிவாகிறது

🪵🪵🪵🪵🪵

உடலின் ஆற்றல் அதிகரிக்கவும், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கவும் தேவையான ஒரு முக்கிய கனிமம், இரும்பு. மொச்சைக் கொட்டை இரும்பு சத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளது.

🪵🪵🪵🪵🪵

மொச்சைக் கொட்டையை எவ்வாறு சமைக்க வேண்டும்

காய்ந்த மொச்சை பயன்படுத்தினால், அதனைக் கழுவி, ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து பின்பு பயன்படுத்த வேண்டும். வேக வைப்பதற்கு முன்னர், ஊற வைத்த மொச்சையில் உள்ள நீரை வடிகட்டி, மீண்டும் ஒரு முறை தண்ணீரில் நன்றாக அலசி பிறகு வேக வைக்கவும். பச்சை மொச்சை பயன்படுத்தும்போது, அதனை ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. சமைப்பதற்கு முன்னர் அதனை எடுத்து அப்படியே பயன்படுத்தலாம்.

🪵🪵🪵🪵🪵

பின்குறிப்பு

மொச்சைக் கொட்டையை வேக வைக்காமல் அப்படியே சாப்பிடக் கூடாது. மொச்சையில் லினாமரின் என்னும் ஒரு கூறு உள்ளது. இது ஒரு விதமான சயனைடு ஆகும். இது உடலுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். வேக வைத்து பயன்படுத்துவதால், இந்த கூறு முற்றிலும் அழிக்கப்பட்டு, உண்பதற்கு பாதுகாப்பாகவும் இருக்கும்

🪵🪵🪵🪵🪵

மேலும் எண்ணிலடங்க உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை மொச்சை கொட்டை பயிர் தன்னகத்தே கொண்டுள்ளது. மொச்சையை உணவில் சேர்த்து கொள்வோம், ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்

🪵🪵🪵🪵🪵

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚

 உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர்  7598258480

வாட்ஸ் அப்  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...