Sunday, April 18, 2021

இன்று திருச்சி மாவட்டத்தில் முசிறி, இலால்குடி பகுதிகளில் நிழல் இல்லா நேரத்தைக் காணலாம்...

இன்று திருச்சி மாவட்டத்தில் முசிறி, இலால்குடி பகுதிகளில் நிழல் இல்லா நேரத்தைக் காணலாம்...

பூமியில் நாள் தோறும் இரவும் பகலும் வந்தாலும் கூட சமமான இரவு பகல் என்பது வருடத்தில் 2 நாட்கள் மட்டுமே.. அந்நாட்கள் மார்ச் 20/21 மற்றும்  செப்டம்பர் 22/23. 

தினமும் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது என கருதுகிறோம்.. உண்மையில் வருடத்தில் ஓரிரு நாட்கள் தான் அதுவும் நேர் கிழக்கில் உதித்து நேர் மேற்கில் மறைகிறது.. மற்ற தினங்களில் வடகிழக்கிலோ அல்லது தென்கிழக்கிலோ உதித்து வட மேற்கிலோ அல்லது தென் மேற்கிலோ மறைகிறது..

அதேபோல நீண்ட பகல் உள்ள நாள் ஜூன், 21 நீண்ட இரவு ஏற்படும் நாள் டிசம்பர், 21.. இதற்கு காரணம் சூரியனின் வடதிசைச் செலவு மற்றும் தென்திசைச் செலவு.. புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் உத்தராயணம் மற்றும் தட்சிணாயணம்.. சொல்லப் போனால் உண்மையில் இதுபோன்ற நாட்கள் தான் வருடத்தில் சிறப்பான நாட்கள் என்று கூறலாம்.. மற்றபடி நல்ல நாள், கெட்ட நாள் என்பவையெல்லாம் மனிதர்கள் உருவாக்கிக் கொண்டவை தான்...


ஒவ்வொரு நாளும் நண்பகல் 12 மணிக்கு உச்சிப் பொழுது என நாம் அறிந்திருக்கிறோம். அந்நேரம் தான் சூரியன் நேர் உச்சியில் இருக்கும் என அனைவரும் நம்புகிறோம்.. ஆனால் இந்தியாவில் அலகாபாத் நகரில் மட்டும் தான் சரியாக 12 மணிக்கு உச்சிப் பொழுது இருக்கும். மற்ற பகுதிகளில் உச்சிப் பொழுது நேரம் என்பது மாறுபடும்... நமது திருச்சி மாவட்டத்தில் அது பிற்பகல் 12.14லிருந்து 12.16க்குள் இருக்கிறது. உண்மையில்  நமக்கு நண்பகல் அதுதான்..


அதே போல தினமும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் செல்வது போலத் தெரிந்தாலும் வருடத்தில் 2 நாட்கள் மட்டுமே மிகச் சரியாக உச்சியில் வரும். இதுவும் கூட உலகின் அனைத்துப் பகுதிகளிலும் கிடையாது.. பூமத்திய ரேகை, கடக ரேகை, மகர ரேகை பகுதியில் உள்ள மக்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்புக் கிடைக்கிறது.. அவ்வாறு உச்சியில் வரும் பொழுது ஒரு பொருளின் மேல் விழும் சூரிய வெளிச்சத்தின் விளைவான நிழல் அப்பொருளின் பரப்பிற்குள்ளேயே விழுவதால் அதன் நிழலை நாம் பார்க்க முடியாது. இந்நிகழ்வு வெறும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடக்கும். எனவே நிழல் இல்லா தருணம் ஏற்படும் அந்த நாட்களை நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் என்கிறோம்..

   

இது ஒரு எளிய வானியல் நிகழ்வு, ஒவ்வொருவரும் ஒரு எளிதான வானியல் பரிசோதனையைச் செய்து பார்க்க கிடைத்த வாய்ப்பு. எனவே ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் உரிய நேரத்தில் சமதளப் பரப்பில் ஏதேனும் உருளையான பொருளைச் செங்குத்தாக வைத்து அதன் நிழல் வெளிப்பக்கம் விழுகிறாதா இல்லையா எனச் செய்து பார்க்கலாம். அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளை, அறிவியல் பூர்வமாகச் செய்து பார்க்கும் கற்கும் முறையினை குழந்தைகளுக்கு வீடுகளில் பெற்றோரே கற்றுக் கொடுக்க இந்நிகழ்வை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்..


மற்றொரு முக்கியமான விசயம், இந்நிகழ்வு எல்லாப் பகுதிகளிலும் ஒரே நாளில் வருவதில்லை.. உதாரணமாக திருச்சி மாவட்டத்தில் திருச்சி, மணப்பாறை, துவாக்குடி சுற்றுவட்டாரத்தில் நேற்று ஏப்.17ம் முசிறி, இலால்குடி சுற்றுவட்டாரத்தில் இன்று ஏப்.18 ஆம் தேதியும் நிழல் இல்லா நாள்.. இதேபோல ஒவ்வொரு பகுதியும் அமைந்துள்ள இடத்திற்கேற்ப நிழல் இல்லா நாள் ஏற்படும்..


பூமி தோன்றிய காலத்திலிருந்து இதே போல தான் சூரியன் வந்து போகிறது என்றாலும் (உண்மையில் சூரியன் வந்து போவது போல தெரிகிறதே தவிர பூமியின் தற்சுழற்சியின் காரணமாக தான் இரவு பகல் ஏற்படுகிறது..) கடந்த சில ஆண்டுகளாக தான் இந்த நிழல் இல்லா நாள் குறித்த பிரச்சாரம் அல்லது உற்றுநோக்கல் என்பது உலகளாவிய அளவில் கவனம் பெற்றுள்ளது.. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இணையவழி பயிற்சி முகாம் நடத்தியது.. அதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நூற்றுக்கணக்கான இடங்களில் விளக்குவதற்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர்கள்  செய்து வருகின்றனர்.. ஏப்.24 வரை பார்க்கலாம்.. மீண்டும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் பார்க்க முடியும்..


இன்று 18.04.2021 நிழல் இல்லா தருணம்  பார்க்க வாய்ப்பு உள்ள பகுதிகள்...


முசிறி – 12:15  pm,

லால்குடி – 12:14  pm,

தொட்டியம் – 12:16  pm,

கும்பகோணம் – 12:12 pm,

பாபநாசம் – 12:12 pm,

திருவையாறு  – 12:13 pm,

கோவை – 12:21 pm,

தொண்டாபுத்தூர் – 12:22 pm,

கிணத்துக்கடவு – 12:21 pm,

சூலூர் – 12:21 pm,

திருப்பூர்– 12:20 pm,

பல்லடம் – 12:20 pm,

காங்கேயம் – 12:19 pm,

வெள்ளகோவில் – 12:18 pm,

மடத்துக்குளம் – 12:21 pm,

கரூர் – 12:18 pm,

குளித்தலை – 12:15 pm,

கிருஷ்ணராயபுரம் – 12:16 pm,

புகளூர் – 12:17 pm,

காரைக்கால்   – 12:10 pm,

கொடுமுடி  – 12:18  pm,

சிவகிரி  – 12:18  pm,

தஞ்சாவூரில் செங்குத்தாக நிற்கும் பொருள்களின் நிழல் பூஜ்ஜியமாகக்கூடிய நிழல் இல்லா நாள் இன்று பிற்பகல் நிகழ்ந்தது.

தமிழகத்தில் ஏப். 10-ம் தேதி முதல் 24-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் சில ஊர்களில் நிழல் இல்லா நாள் நிகழ்வு வருகிறது. அதாவது, குறிப்பிட்ட நாளில் நண்பகலில் மிகச்சரியாக சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும். அப்போது, நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும். செங்குத்தாக நிற்கும் பொருள்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்துவிடுவதால் நம் கண்களுக்குத் தெரியாது. அந்த நாளைத்தான் 'நிழல் இல்லா நாள்' என்றும், 'பூஜ்ஜிய நிழல் நாள்' எனவும் கூறுகிறோம்.

இதன்படி, ஏப்.10-ம் தேதி கன்னியாகுமரி, நாகர்கோவிலிலும், 11-ம் தேதி திருவனந்தபுரம், திருச்செந்தூரிலும் என, தொடர்ந்து ஒவ்வொரு நாளாக சில ஊர்களில் 'நிழல் இல்லா நாள்' நிகழ்ந்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, தஞ்சாவூரில் இன்று (ஏப். 17) 12.12 மணிக்கு நிழல் இல்லா நாள் நிகழ்ந்தது.

இந்த இரு நாள்களில் மட்டுமே நிழல் முழுவதுமாக மறையும். மற்ற நாள்களில் நண்பகலில் கூட வடக்கு திசையிலோ அல்லது தெற்கு திசையிலோ சிறிய நிழல் விழும்.

இந்த இரண்டு நிழலில்லா நாள்கள் கூட கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் வரும். அதற்கு அப்பால் துருவப்பகுதி வரை சூரியன் தலைக்கு மேலே வரவே வராது" என்றார்.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...