Thursday, April 22, 2021

✍🏻🍛🍲🍜🍝🍛இயற்கை வாழ்வியல் முறை🍛🍲🍜🍝🍛பாரம்பரிய சிறுதானிய உணவின் சுவையும் அதன் பயன்களும்.

✍🏻🍛🍲🍜🍝🍛இயற்கை வாழ்வியல் முறை🍛🍲🍜🍝🍛பாரம்பரிய சிறுதானிய உணவின் சுவையும் அதன் பயன்களும்.

🌾🌾🌾🌾🌾

கம்பு, சோளம் வரகு, சாமை தினை குதிரைவாலி கேழ்வரகு  போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும்.

இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. அரிசி கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து நார்ச்சத்து மிகுந்தும் பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.

🌞🌞🌞🌞🌞

பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்

🥗🥗🥗🥗🥗

தினை

திணையில் அதிகளவு பலகாரம் செய்யலாம். அதாவது சர்க்கரைப்பொங்கல், கருப்பட்டி, உளுந்தங்களி, பாயாசம், அதிரசம், மைசூர்பாக் மற்றும் லட்டு ஆகியவற்றை செய்யலாம்.

இருப்பினும் தினையை உட்கொள்ளும்போது உடல் சூடு அதிகரிக்கும்

எனவே சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிக்கலாம்

திணையில் கூழ்  செய்து பிரசவமான தாய்க்கு கொடுப்பதன் காரணம் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்

பார்வை

குறைந்த ஒளியை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. எனவே தொடர்ந்து தினையை உட்கொண்டால் கண்பார்வை பிரகாசமாகும்

தினைமாவுடன் தேனை கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும்.

தினை விரைவில் செரிமானமாகும் திறனை கொண்டதால் பசியை தூண்டும்.

தினமும் தினை உட்கொண்டால் உடலுக்கு அதிகளவு வலுவை சேர்க்கும்.

தினை தரும்பயன்கள் | ஆரோக்கியமே செல்வம்

🥔🥔🥔🥔🥔 

சாமை:

எல்லாவித சமையலுக்கும் உகந்த சிறுதானியமாக சாமை விளங்குகிறது.

சாதம், இட்லி, தோசை மற்றும் கிச்சடி போன்ற உணவுகளை இவற்றில் செய்யலாம்.

நெல்லரிசியை காட்டிலும் 7 மடங்கு நார்சத்து கொண்டதால் மலச்சிக்கல் மற்றும் நீரிழிவு பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.

சாமை

இரத்த சோகை உள்ளவர்களுக்கு சாமை சிறந்த தீர்வை தருகிறது.

சாமையில் அதிகளவு மினரல்ஸ் உள்ளதினால் நம் உடலில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை மிகவும் எளிதாக அதிகரிக்கிறது.

மொத்தத்தில் சாமை ஆரோக்கிய உணவுகளின் அடித்தளமாகும்.

உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சாமை பற்றி தெரியுமா?

🥥🥥🥥🥥🥥

குதிரைவாலி சுவைமிகுந்த சிறுதானிய வகைகளில் ஒன்றாகும்.

இவற்றில் இட்லி, இடியாப்பம் கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேகவைக்கும் உணவுகள் மிகவும் மிருதுவாக இருக்கும்.

குதிரைவாலி சாதத்தில் தயிர் சேர்த்து உட்கொள்ளும் போது வயிற்றுக்குள் நன்மை தரக்கூடிய lactobacillus என்ற பாக்டீரியாக்களை தருகிறது

மேலும் குதிரைவாலி மோர் சோறு, அல்சரை குணப்படுத்தும்

தினமும் குதிரைவாலி சோறு உட்கொள்ள சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்

குதிரைவாலி, உளுந்து சேர்த்து களியோ அல்லது கஞ்சியோ செய்து சாப்பிட, இடுப்பு வலி மற்றும் வயிற்று கடுப்பு பிரச்சனை சரியாகும்.

காய்ச்சல் இருக்கும்போது குதிரைவாலியை கஞ்சி வைத்து குடித்தால் காய்ச்சலை குணப்படுத்தும்.

வாய்வு பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கு குதிரைவாலி மிகவும் உதவுகிறது.

குதிரைவாலி அரிசியின் நன்மைகள் மற்றும் பயன்கள் - Expres Tamil

🌽🌽🌽🌽🌽

வரகு

அடிப்படை உணவாக வரகரிசி திகழ்கிறது. மேலும் உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

வரகரிசியில் அனைத்து வகையான திண்பண்டங்களையும் செய்யலாம் அதுவும் பிரியாணி செய்வதற்கு பொருத்தமானதாகும்.

வரகு சுட்ட சாம்பல் கர்ப்பிணி பெண்களின் இரத்த போக்கை நிறுத்துகிறது

பித்த உடம்புக்காரர்கள், சளித்தொல்லையுள்ளவர்கள், தோல் பிரச்சனை உள்ளவர்கள் வரகரிசியை மிகவும் குறைவாக சாப்பிட வேண்டும்.

தேள் கடிக்கு மருந்தாகவும் பயன்படுகிறது வரகு.

வரகு அரிசியை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

🥒🥒🥒🥒🥒

கேழ்வரகு

கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு, அல்வா மற்றும் பக்கோடா என பலவகையான பலகாரங்கள் செய்யலாம்

கேழ்வரகில் அதிகளவு கால்சியம் இருப்பதினால் மூட்டுவலி பிரச்சனைக்கு தீர்வாகிறது.

கேழ்வரகு கூழானது மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை நிறுத்தும் தன்மை கொண்டது.

உடலை உறுதிப்படுத்தவும், பித்தத்தை தணிக்கவும், வாதத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது

உடல் உழைப்பு இல்லாதவர்கள் கேழ்வரகு உட்கொண்டால் ஜீரணமாகாது. அதே போல் மலச்சிக்கல் உள்ளவர்கள் கேழ்வரகை குறைந்தளவு அல்லது தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.

கேழ்வரகு உண்பதால் எலும்பு தேய்மானத்தை தடுத்திடலாம்

🍒🍒🍒🍒🍒

கம்பு

மிகவும் ஆரோக்கியமான கிராமத்து உணவாக இன்று வரை கம்மங்கூழ், தோசை, குழிப்பணியாரம் போன்ற உணவு இடம் பெற்று வருகிறது.

கம்பு உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய சிறுதானிய உணவுகள் கேழ்வரகு உஷ்ணத்தை அதிகரிக்கும் சிறு தனியமாகும்.அதனாலதான் கம்பு, கேழ்வரகு இரண்டையும் ஒன்றாக சேர்த்து கூல் தயாரிப்பது வழக்கமாகும்பயன்கள்

புரதம் மற்றும் கால்சியம் கம்பில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

கம்மங்கூலில் சிறிதளவு மோர் சேர்த்து குடித்தால் வயிற்று எரிச்சல், வயிற்று பொருமல் மற்றும் மூலம் ஆகிய பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கின்றது.

🍲🍲🍲🍲🍲

அதே சமயம் சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் தோல் நோய் பிரச்சனை உள்ளவர்கள் கம்பை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும். 

Bajra in Tamil, Kambu Benefits in Tamil, கம்பு பயன்கள்

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

🦚🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

சிறுதானியங்களில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!

🦚🦚🦚🦚🦚

நன்றி :பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர்  7598258480

வாட்ஸ் அப்  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N. P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...