தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு வரும் செவ்வாய்கிழமை(ஏப்ரல்-20) முதல் அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, புதிய கட்டுபாடுகளின் படி, இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு ஊரடங்கின்போது ஆட்டே, பஸ், போன்ற தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.
மே மாதம் நடைபெற இருந்த 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஓட்டல்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் வாங்க மட்டுமே அனுமதி.
*ஸ்விகி சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் உணவு விநியோகம் செய்யலாம்.
*தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. அதற்கு மேல் அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையே இரவில் அரசு, தனியார் போக்குவரத்து அனுமதி கிடையாது.
ஐ.டி. பணியாளர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
*அனைத்து சுற்றுலாதலங்களும் மூடப்படும்.
*ஊடகங்கள் மற்றும் பத்திரிகை துறையினர் தடங்கல் இன்றி செயல்படலாம்.
*மாநிலத்தில் பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல் இயங்கலாம்
*மாஸ்க் அணியாமல் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டால் தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு
*கல்லூரி மற்றும் பேராசிரியர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்பு எடுக்க அனுமதி
இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment