தமிழகத்தில் ஜூன் 7 வரை ஊரடங்கை நீட்டிப்பு செய்து முதலமைச்சர் அறிவிப்பு .
தமிழ்நாட்டில் தற்போது அமுலில் உள்ள முழு தீவிர ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படும் என மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மே 24ம் திகதி முதல் மே 31ம் திகதி வரை சுமார் ஒரு வார காலத்திற்கு தமிழக அரசு முழு தீவிர ஊரடங்கு விதித்தது.
முழு ஊரடங்கு விதித்ததின் பலனாக தமிழகத்தில் சற்று கொரோனா தொற்று குறைந்துள்ளது. எனினும் 30,000 கீழ் தினசரி தொற்று எண்ணிக்கை குறையவில்லை. குறிப்பாக சென்னை தொற்று எண்ணிக்கை 3000-க்கு கீழ் குறைந்துள்ளது, ஆனால் சென்னையை விட கோவையில் தற்போது தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஊரடங்கு வரும் 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும். நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 வரை காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தவிர, பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில்,13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கி, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
Hon'ble CM Statement-Lockdown Extension-Link
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment