Friday, May 21, 2021

அழகர்சாமியின் குதிரை-அப்பா ✍️இ.கிருபா BBA-NMC.

அழகர்சாமியின் குதிரை-அப்பா ✍️இ.கிருபா BBA-NMC.

 அழகர்சாமியின் குதிரை


ஊரெங்கும் தோரணங்கள்..

வீதியெங்கும் கோலங்கள்..

அப்பாவோடு,

அழகர் திருவிழா பார்த்த

ஞாபகம்....


வைகையோரமாய்

நடந்துபோகையில்-முன்பு

காணாத முகமெல்லாம்

நலம் விசாரிக்க...

அப்பாவோடு நானும்

புண்ணகைப்பேன்...

மதுரை மண்வாசம்

தென்மேற்கு தூரலில்

தேனிவரை வீசும்..

அப்பா சொன்ன 

ஞாபகம்....



திருவிழாக்கடையொன்றில்,

அப்பா வாங்கி தந்த

கலர்கண்ணாடி,

இன்னும் பத்திரமாய்

என்னிடம்..


அறியா வயதொன்றில்

அப்பா முதுகில்

விளையாடையில்,

செல்லமாய் அழகர் 

என்றார்....



அன்றுமுதல்

எனக்கு விவரம்

அறியும்வரை,

இந்த அழகர்சாமியை

சுமந்த குதிரை

அவர்தான்....



திருவிழா முடியும்வரை

அவர் தோள்தான்

எனக்கு சிம்மாசனமாய்...


திருவிழா நாளிள்,

குதிரை மீதிருந்து,

அழகர்

ஆற்றில் இரங்கையில்..

அப்பா தோள்மீது 

அமர்ந்து

தரிசித்தேன்.....

ஆற்றில் இரங்கிய

அழகரை அல்ல...

தோளிள் சுமந்து

இவ்வுலகையே

அழகாய் காட்டிய-என்

அப்பாவை....

✍️கவிதை✍️:இ.கிருபா BBA, நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.  

From Sri Lanka. 

இது போன்ற தகவல் பெற


 

No comments:

Post a Comment

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம்.

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம். ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும் மறைவையும் பார்க்கும் விண்வெளி ...