தமிழகத்தில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, மற்றும் கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதிக கனமழையின் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே 14ம் தேதி தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் 40 கி.மீ வேகத்தில் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் கூடிய பலத்தை மழை பெய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக புதிய புயல் உருவானால் அதற்கு TAUKTEA என பெயரிட இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. புயலினால் தென் தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், அரபிக்கடலில் 50 முதல் 60 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீச இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment