Saturday, May 1, 2021

✍🏻🏵️🏵️இயற்கை வாழ்வியல் முறை🏵️🏵️உடல் எடையை அதிகரிக்க உணவுகள்.

✍🏻🏵️🏵️இயற்கை வாழ்வியல் முறை🏵️🏵️உடல் எடையை அதிகரிக்க உணவுகள்.

🏵️🏵️🏵️🏵️🏵️

குண்டு உடல்வாகோடுஉடல் எடை அதிகமாகி உடல்பருமனுக்கு ஆளாவது எவ்வளவு தீவிரமான பிரச்னையோ அதேபோல தீவிரம் கொண்டது எடை குறைந்து உடல் மெலிந்திருப்பது அப்படி மெலிந்திருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டியதும் அவசியமே.

வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற உடல் எடை ஒவ்வொருவருக்குமே மிக மிக அவசியம் சிக்ஸ்பேக் வரவழைக்கிறேன் பேர்வழி என ஆண்களும், மெல்லிடை வேண்டும் எனப் பெண்களும் எடை குறைத்து உடல் மெலிந்து வருவது இன்று அதிகமாகிவருகிறது. எனக்குள் என்ன நடக்கிறது என்ற அறிவும் அக்கறையும் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய அடிப்படையான விஷயம்

உடல் எடையைத் தேற்றுவது என்பது குழந்தைப் பருவம் முதலே இருக்கவேண்டிய அக்கறை. சிறு குழந்தையின் உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால் இளங்காசம் எனும் பிரைமரி காம்ப்ளெக்ஸ் காரணமாக இருக்கக்கூடும். இந்தியாவில் குழந்தைகளின் எடை குறைவுக்கு மிக முக்கியக் காரணம் பிரைமரி காம்ப்ளெக்ஸ்தான். சிறு குழந்தையாக இருக்கும்போதே இதைச் சரியாகக் கவனிக்கத் தவறும்போது பின்னாளில் எப்போதும் மெலிந்த தேகம் நிலை பெற்றுவிட வாய்ப்பு உண்டு.

உடல் எடை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்? | Weight gain foods in Tamil

🏵️🏵️🏵️🏵️🏵️

டபுள் மீல்ஸ் டோக்கன் வாங்கி, என்னதான் கண்டதையும் சாப்பிட்டாலும் உடல் தேற மாட்டேங்குது என்கிறவர்களும் இருக்கிறார்கள் உடல் எடை அதிகரிக்க சில உணவுகளும் வழிமுறைகளும் உண்டு அவை இங்கே...

🏵️🏵️🏵️🏵️🏵️

கஞ்சி அன்னத்திற்கு காயம் பருத்திடும்’ என்கிறது சித்த மருத்துவம். காலை வேளையில் சிறு குழந்தையாக இருந்தால் சத்து மாவுக் கஞ்சியும், இளைஞர்களாக இருந்தால் அரிசி தேங்காய்ப்பாலும் சாப்பிடுவது உடல் எடை ஏற ஒத்தாச்சை செய்யும். 'கஞ்சி’என்பதற்கு காய்ச்சி அருந்துவது என்று பொருள். உடைத்த புழுங்கல் அரிசி, அதில் கால் பங்கு பாசிப் பயறு எடுத்து, வறுத்து திரித்து வைத்துக்கொண்டு நீர்விட்டுக் காய்ச்சி, அதில் சூடான பால், சர்க்கரை, சிறிது பசு நெய் சேர்த்துக் குழந்தைக்கு வாரத்துக்கு இரண்டு, மூன்று தடவை கொடுக்கலாம். 

🏵️🏵️🏵️🏵️🏵️ 

இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது முதுமொழி மட்டுமல்ல, மருத்துவ மொழியும்கூட. இளைத்த உடல் உடையவர்கள், இட்லி, தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி, நொறுக்குத்தீனியாக எள்ளுருண்டை என எள்ளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு உளுந்து சேர்த்த உணவுகள் மிக நல்லது. இளம் பெண்களில், மிகவும் மெலிந்த உடலோடு இருக்கும் பெண்கள், சற்று வாளிப்பான உடல்வாகு பெறுவதற்கு எள்ளும் உளுந்தும் மிகவும் பயன்தரும்.

The greatness of sesame || எள்ளின் மகத்துவம்

🏵️🏵️🏵️🏵️🏵️

வயிற்றில் அல்சர் எனும் வயிற்றுப்புண், குடல்புண் இருந்தாலும் சிலருக்கு உடல் எடை ஏறாது. இப்படியான நோய்களுக்கு ஆளானவர்கள்தினசரி காலையில் நீராகாரம் (உடைத்த புழுங்கல் அரிசி கஞ்சியில் வெந்தயம், சீரகம் சேர்த்துச் செய்து வடித்தது), மதியம் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இந்த உணவுப்பழக்கம், குடல்புண்ணையும் ஆற்றும்; உடை எடை உயர்ந்திடவும் உதவும்.

வாரத்துக்கு இரண்டு முறையாவது தேங்காய்ப்பாலை உணவில் சேர்ப்பது நல்லது.

தினம் ஒரு தகவல்: நீராகாரம்

🏵️🏵️🏵️🏵️🏵️

இரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் (Irritable Bowel Syndrome) எனும் கழிச்சல் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறுவது இல்லை. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்கத் தூண்டும். எங்காவது வெளியில் கிளம்ப ஆயத்தமாகும்போதும், சூடான, காரமான உணவைச் சாப்பிட்டவுடனும் மலம் கழிக்கத் தூண்டும் இந்த கழிச்சல் நோயில், மெலிந்த தேகம் நிரந்தரமாகிவிடும். இந்த நோய் இருப்பவர்கள், மருத்துவ சிகிச்சையுடன் சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாதுளை ஆகிய உணவுகளை தினசரி சேர்ப்பது நோயை நீக்கி, உடல் எடையை அதிகரிக்க உதவும். 

எடை அதிகரிக்க அதிகம் உதவுவது, வாழை. அதிலும், நேந்திரம் பழத் துண்டுகளை தேனுடன் சேர்த்து, மாலை வேளைகளில் நொறுக்குத்தீனியாக குழந்தைகளுக்குக் கொடுப்பது எடையை உயர்த்துவதுடன், நோய் எதிர்ப்பாற்றலையும் கூட்டும். 

பசும்பால், பசு வெண்ணெய் இரண்டும் உடல் எடையைக் கூட்ட உதவும். 

🏵️🏵️🏵️🏵️🏵️

பழ வகைகளில் மாம்பழம் அதிக கலோரிகளை கொண்ட ஒரு பழ வகை ஆகும்; ஒரு நடுத்தர மாம்பழம் 150 கலோரிகளை கொண்டது, இரண்டு நடுத்தர மாம்பழங்களை உட்கொண்டால் ஒரே சமயத்தில் 300 கலோரிகளை உடல் பெற்றுவிடும்.


உங்களுக்கு தேவையானவை

 ஒரு பெரிய மாம்பழம்

 1 கப் பால்

மாம்பழத்தின் தோலுரித்து, அதிலிருந்து விதையை நீக்கி பழச்சதையை எடுத்து வைத்து கொள்ளவும்.

அதனுடன் பால் சேர்த்து கூழாக அரைத்து உட்கொள்ளவும்

முன்பே கூறியது போல் அதிக கலோரிகளை கொண்ட மாம்பழத்துடன் பால் சேர்த்து கூழாக்கப்பட்ட கலவையை தொடர்ந்து உண்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பில் ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும்.

🏵️🏵️🏵️🏵️🏵️

உடலுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை அதிகரிக்க பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய பொருள் அஸ்வகந்தா ஆகும் இது தசைகளின் நிறை மற்றும் பலத்தை அதிகரிக்க உதவுவதாக பல ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவித்துள்ளன (2). இந்த அஸ்வகந்தா பொடியை, உட்கொள்வதை நிறுத்திய பின் அல்லது உட்கொள்வதை குறைத்த பின் கூட, உடலில் உருவான தசைகளின் நிறை நீண்ட காலத்திற்கு அப்படியே இருக்கும்

உங்களுக்கு தேவையானவை

100 கிராம் அஸ்வகந்தா

100 கிராம் வறண்ட இஞ்சி பொடி

100 கிராம் சர்க்கரை

½ தம்ளர் தண்ணீர்

1 தம்ளர் பால்

ஒரு பாத்திரம் (கொதிக்க வைக்க தேவையான)

1 காற்று புகாத புட்டி

அஸ்வகந்தா இஞ்சி சர்க்கரை ஆகிய அனைத்தையும் கலந்து பொடி செய்து கொள்ளுங்கள்இந்த பொடியை ஒரு காற்று புகாத புட்டியில் போட்டு வைக்கவும்

ஒரு பாத்திரத்தை எடுத்து நீர் மற்றும் பாலை சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளவும்.

பொடித்து வைத்துள்ள அஸ்வகந்தா பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து, நீர் மற்றும் பால் சேர்த்த கலவையில் கலந்து கொள்ளவும்

இக்கலவையை நீர் வற்றும் வரை ஒரு சில நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்

இவ்வாறு தயாரித்த பானத்தை தினமும் குடியுங்கள்

இந்த அஸ்வகந்தா பொடியை பாலில் கலந்து, நாள் ஒன்றுக்கு 1-2 முறைகள் பருகலாம் இச்செய்முறையை தொடர்ந்து ஒரு மாதம் பருகி வந்தால் உடலில் நல்ல விதமான மாற்றங்களை உட்கொள்ளலாம்.

இந்த அஸ்வகந்தா பொடியை பாலில் கலந்து, நாள் ஒன்றுக்கு 1-2 முறைகள் பருகலாம்; இச்செய்முறையை தொடர்ந்து ஒரு மாதம் பருகி வந்தால், உடலில் நல்ல விதமான மாற்றங்களை காணலாம்.

குழந்தைகளின் எடையை அதிகரிக்க கொடுக்கக்கூடிய உணவுகள் - Lifie.lk Tamil |  வாழ்க்கைக்கு....

🏵️🏵️🏵️🏵️🏵️

உணவு உட்கொள்ளும் பொழுது நடுவில் நீர் பருகுவது, உங்களை குறைந்த அளவிலான உணவினை உட்கொள்ள செய்யும் ஆகையால் உணவு உண்ணும் பொழுது இடையில் தண்ணீர் குடிப்பதை தவிருங்கள்.

இலேசான அல்லது கொழுப்பு ஆடை நீக்கப்பட்ட உணவுகளை தவிருங்கள்; உதாரணத்திற்கு, பால்  குடிக்கும் பொழுது அவற்றில் ஆடை அதாவது கொழுப்பு நீக்கப்படாத உணவுகளை உட்கொள்ளுங்கள்.

அதிக அளவு உணவுகளை உட்கொள்ளுங்கள் மேலும் பெரிய தட்டுக்களில் அதிக அளவு உணவுகளை வைத்து சாப்பிடுங்கள்

நாள் முழுதும் அடிக்கடி உணவு பொருட்களை உட்கொள்ளுங்கள்.

உணவுகளை உட்கொள்வதோடு மட்டும் அல்லாமல், உணவுகளுக்கு இடையில் நொறுக்குத்தீனிகளையும் சாப்பிடுங்கள். இந்த நொறுக்கு தீனிகள் கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாரத்திற்கு 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை உடல் எடை பயிற்சிகளை செய்யலாம்.

உடல் எடையை அதிகரிப்பதற்கு செயற்கையான சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக இயற்கையான அல்லது மூலிகை பொருட்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் ஏற்கனவே உடலில் உருவான தசைகளுக்கு எவ்வித பாதிப்பு மற்றும் தசை இழப்பு இல்லாமல், இயற்கை முறையில் உடல் எடையை அதிகரிக்கலாம்.

சரியான நேரத்தில் முறையாக உறங்குவது தசை வளர்ச்சியை மேம்படுத்த உதவும்; இரவில் சரியாக, நல்ல முறையில் உறங்குங்கள்.

🏵️🏵️🏵️🏵️🏵️

இயற்கை முறையில் காணப்படும் உடல் எடை அதிகரிப்பு குறிப்புகள் ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக படித்து அறிந்தோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து முறைகளுமே சரியான பலன்களை அளிக்கக்கூடியவையே! இவற்றில் எந்த ஒரு முறையையும் மேற்கொள்ளும் முன் முறையான மருத்துவ கலந்தாய்வு மேற்கொள்வது நல்லது.

உடல் எடை அதிகரிக்க விருப்பமா? || Want to gain weight

🏵️🏵️🏵️🏵️🏵️

மெலிந்து இருப்பது ஃபேஷனாகி வரும் இந்தக் காலத்தில் உள்ளே மறைந்திருக்கும் நோயை மறந்து அல்லது அலட்சியமாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாது. வயதுக்கு ஏற்ற சரியான எடை இல்லையென்றால், அது சாதாரண ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் புற்றுநோய் வரை எதுவாகவும் இருக்கலாம். குடும்ப மருத்துவரை அணுகி, உடல் இளைத்தல், எடை குறைதலுக்கான காரணங்களை அறிந்துகொண்டு, உடனே தீர்க்க வேண்டியது அவசியம்.   

🏵️🏵️🏵️🏵️🏵️

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்‌.

 உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் 25 உணவுகள்!!! | Top 25 Foods to Gain  Weight - Tamil BoldSky

🌷🌷🌷🌷🌷    

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🌷🌷🌷🌷🌷

நன்றி: பெருசங்கர்,  ஈரோடு மாவட்டம், பவானி.

செல் நம்பர் 7598258480 

வாட்ஸ் அப் எண்  7598258480 

🌷🌷🌷🌷🌷

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9750895059.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...