Thursday, May 27, 2021

சமூக வலைதளங்களுக்கு அரசு வகுத்த புதிய ஒழுங்கு விதிமுறைகள் என்னென்ன? - ஒரு பார்வை-கவனம் தேவை.

சமூக வலைதளங்களுக்கு அரசு வகுத்த புதிய ஒழுங்கு விதிமுறைகள் என்னென்ன? - ஒரு பார்வை.


யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி வலைதளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் புதிய ஒழுங்கு விதிமுறைகள் என்னென்ன?


சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசின் மின்னணு தகவல்நுட்ப அமைச்சகம் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகள் என பெயரிட்டு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அரசாணையாக வெளியிட்டது.

அதன்படி ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனமும் மாதம் ஒருமுறை எவ்வளவு புகார்கள் வருகின்றன என்பது தொடர்பான முழுமையான தகவல்களை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைதீர்ப்பு, ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை கையாள ஒவ்வொரு சமூகவலைதளமும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும், அந்த அதிகாரிகள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபாச புகைப்படங்கள் குறித்து புகார் அளித்த 24 மணிநேரத்திற்குள் அவற்றை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும். புகார்கள் தொடர்பாக 36 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

தவறான தகவலை பரப்பக்கூடிய முதல் நபர் யார் என்பதை கண்டறிந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரசோ, நீதிமன்றமோ தகவல்களை கேட்கும்போது கண்டிப்பாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது.

த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது. உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த.பாதர்...