தமிழ் வழியில் அனைத்து பொறியியல் பாடங்களை படிக்க அனுமதி | Engineering In Tamil Medium.
தாய்மொழியில் பாடம் கற்பதே எளிதாக மனதில் பதியும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் தாய் மொழி வழி கல்வியே வழிவகுக்கும் என்று உலகம் முழுக்க கல்வியாளர்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்கள். வளர்ந்த நாடுகளிலும் பொறியியல், மருத்துவ படைப்புகள் அவர்களின் தாய் மொழியிலேயே ரஷ்யா, ஜப்பான், சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் எல்லாம் அவர்களின் தாய்மொழியிலேயே பாடங்கள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் தற்போது இந்தியாவில் பொறியியல் பாடங்களை பல்வேறு மாநில மொழிகளில் கற்பிக்கும் முடிவை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் எடுத்துள்ளது.
அதன்படி தமிழ் உட்பட 7 மொழிகளில் பொறியியல் பாடங்களை கற்பிக்க ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ், பெங்காலி, இந்திய, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கு இந்த புதிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment