Friday, May 28, 2021

✍️கவிதை✍️பசி இல்லா உலகம் மீட்டுவோம்✍️இரஞ்சிதா தியாகராஜன்-NMC.

✍️கவிதை✍️பசி இல்லா உலகம் மீட்டுவோம்✍️இரஞ்சிதா தியாகராஜன்-NMC.

மழைநீர் மகுடம் அணிந்து மஞ்சத்தில்.... 

ஒரு சிசுவின் இரு விழியோரத்தில்.... 

         பசி


உச்சி வெயில் சுட்டெரிக்க.... 

உள் பாதங்கள் இரண்டும் காலணிகளை இழக்க.... 

உணவு கிடைக்குமா??? என்ற ஆவலில் சிலர் நோக்க.... 

செல்வந்தரே!!! நீயோ விளம்பரம் செய்யும் எண்ணத்தில் புகைப்படத்திற்காக நோக்க.... 


பசுமையான இலையில் படையல் வைத்து கடவுளை தேடுகிறாய் மனிதா!!! 

பரதேசி போல் பசியால் வாடுபவர்கள் உணவு கேட்டால் தாக்குகிறாய் ஏனடா???.... 


கடவுளையும் வணங்குவோம்... 

கருணையோடும் உதவ இணங்குவோம்.... 


என் கவிதை வரிகள் இவ்வளவு பேசுகின்றன பிறர்க்கு உதவுங்கள் என்று.... 

கருணை உணர்வு என்னிலும் கருப்பாகத்தான் ஆட்சி செய்தது என் மனதில் நின்று... 


இரண்டு வருடம் முன் "அனீஸ் " என்ற என் ஆசிரியரின் அன்பாலயத்தில் உதவும் பண்பு.... 

கருணையின் கருப்பை வெண்மையாக்கிறது என் மனதை வென்று... 


கிடைத்தது வாழ்க்கையில் இதுவரை நான் அடையா சந்தோஷம்... 

நான் முதன்முதலில் பிறர்க்கு உதவிய அந்த நிமிஷம்... 


உதவி கரம் நீட்டுவோம்.. 

உலகில் பசியால் வாடுபவர்களை மீட்டுவோம்....

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/GU0BJhBILJc3oySzsedd6J

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி. 

இன்று உலக பசி தினம்.உணவு கிடைக்காமல் உலகின் பெரும் கூட்டம் வாடிக் கொண்டிருக்க, உணவு வீணடிக்கப்படுதல் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் உணவு கிடைக்காமல் பசியுடன் இருப்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. எய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்ட நோய்களால் இறப்பவர்களை விட பசியால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்று கூறப்படுகிறது. பசியால் வாடும் மக்கள் வசிக்கும் நாடுகள் உள்ள பட்டியலில் 100 வது இடத்தில் இந்தியா இருந்துச்சாம்.. இப்போதைய கணக்கு இன்னும் சில மணி நேரத்தில் வரக்கூடும். இத்தனைக்கும் இந்தியாவில் உணவுக்கான உரிமை சட்ட பாதுகாப்பு கொண்ட அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. 

உலக அளவில் பசியால் வாடும் மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் போஸ்னியா, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க நாள்தோறும் அவரது உணவின் வாயிலாக 2,100 கலோரி கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. வரையறுத்திருக்கிறது. உலகின் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களில் 98 சதவீதம் பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆசிய நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. அன்றாட உணவில் ஊட்டச்சத்து எவ்வளவு கிடைக்கிறது என்பதன் அடிப்படையிலேயே ஒருவர் வறுமையில் வாடுகிறாரா என்பது கணக்கிடப்படுகிறது. நகர்ப்புற குழந்தைகளை ஒப்பிடும் போது ஊட்டசத்து குறைபாட்டால் கிராமப்புற குழந்தைகள் 2 மடங்கு குள்ளமாக வளர்கின்றனர். உலகம் முழுவதும், போதிய உணவு கிடைக்காதே 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என்பதும் அதிர்ச்சித் தகவல்.


No comments:

Post a Comment

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம்.

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம். ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும் மறைவையும் பார்க்கும் விண்வெளி ...