Sunday, June 20, 2021

ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு!-தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து சேவைகள்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து கொண்டே வரும் நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வாரம் ஜூன் 28 வரை நீட்டிக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 23 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட எல்லைகளுக்குள் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள் செயல்படும் நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரத்தின் அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.

வகை 1 – (11 மாவட்டங்கள்‌)

கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌

வகை 2 – (23 மாவட்டங்கள்‌)

அரியலூர்‌, கடலூர்‌, தருமபுரி, திண்டுக்கல்‌, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம்‌, வேலூர்‌ மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்கள்‌.

வகை 3 – (4 மாவட்டங்கள்‌)

சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌

மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுள்‌, வகை 1-ல்‌ உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்‌ மட்டும்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌. மேலும்‌, வகை 2-ல்‌ உள்ள 23 மாவட்டங்களில்‌, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத்‌ தளர்வுகளும்‌, கூடுதலாக செயல்பாடுகளுக்கும்‌ அனுமதி அளிக்கப்படுகிறது.

ஊரடங்கு நீட்டிப்பு அரசு செய்தி-Link




இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...