Sunday, June 13, 2021

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில்  கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்.  

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில்  கொரோனா தடுப்பூசி  செலுத்துவதன் முக்கியத்துவத்தையும், தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்திலும்  நேரு நினைவு கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கமும்,  இந்திய செஞ்சிலுவை சங்கம்  மற்றும் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து நேரு நினைவு கல்லூரியின் மூக்கப்பிள்ளை கலையரங்கில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்தியது.  இம்முகாமில் புத்தனாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள அபினிமங்களம் கோட்டாத்தூர், ஓமாந்தூர், வெள்ளக்கல்பட்டி, குன்னுப்பட்டி ஆகிய கிராமங்களிலிருந்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி மொத்தம் 661 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டது.  

இம்முகாமை கல்லூரியின் தலைவர் Er.பொன்.பாலசுப்பரமணியன் அவர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர்.A.R.பொன்பெரியசாமி துவக்கி வைத்தார்கள்.  இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளைத் தலைவர் மற்றும் இந்திராகனேசன் கல்வி குழும செயலாளர் Er.இராஜசேகரன் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட  பொதுசுகாதாரபணித்துறை  இணை இயக்குநர்  மருத்துவர்  ராம்கணேஷ் அவர்களும் தலைமை வகித்தார்கள்.  பாரதிதாசன் பல்கலைக்கழக இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர்.K.வெற்றிவேல் அவர்கள் முன்னிலை வகித்தார்.


முகாமிற்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், திரு.கார்திகேயன், வட்டார மருத்துவ அலுவலர், அரசு மருத்துவமனை தண்டலைப்புதூர், முசிறி மற்றும் மருத்துவர் செந்தில்குமார் அரசு ஆரம்ப சுகாதார மையம், கோட்டாத்தூர் அவர்கள் முன்னின்று வழங்கினர்.


இம்முகாமிற்கு அனைத்து ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை நேரு நினைவு கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.G.திலகவதி அவர்கள் செய்திருந்தார்கள்.  மேலும் இம்முகாமிற்கு கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியர்கள் முனைவர்.G.பாலசுப்பரமணியன், முனைவர்.A.பிரபு மற்றும் தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர்.D.மகேஸ்வரி அவர்களும், இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் மாணவர்கள், தேசிய மாணவர்படை மாணவர்கள் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் உதவி புரிந்தனர்.


2 comments:

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...