✍🏻⏸️⏸️இயற்கை வாழ்வியல் முறை⏸️⏸️சப்போட்டா பழத்தின் நன்மைகள்.
⏸️⏸️⏸️⏸️⏸️
இயற்கையாக கிடைக்கும் பழ வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே நம் ஆரோக்கியத்திற்கு எந்தவகையான குறையும் ஏற்படாது. அதிலும் சில வகை பழங்களில் உள்ள சத்துக்கள் நம் உடலில் ஏற்படும் பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. இந்த பட்டியலில் சப்போட்டா பழமும் அடங்கும்
⏸️⏸️⏸️⏸️⏸️
100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும் சருமம் பளபளப்பாகும்.
⏸️⏸️⏸️⏸️⏸️
சப்போட்டா, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூலநோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகளை வலுவடையச் செய்கிறது.
இரவில் உறக்கம் வராமல் அவதிப்படும் நிலைக்கு நல்ல மருந்தாகும், சப்போட்டா. இதை ‘ஜூஸ்’ ஆக தயாரித்து அருந்தலாம்
⏸️⏸️⏸️⏸️⏸️
பழக்கூழ், ஜாம், மில்க் ஷேக் என்று சப்போட்டாவை விதவிதமாய் தயாரித்தும் சாப்பிடலாம்
⏸️⏸️⏸️⏸️⏸️
இதயம் சம்பந்தமான கோளாறுகளில் இருந்து காக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு என ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது
⏸️⏸️⏸️⏸️⏸️
சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு.
⏸️⏸️⏸️⏸️⏸️
உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைத்துவிடும் அரிய தன்மையும் சப்போட்டாவுக்கு இருக்கிறது.
⏸️⏸️⏸️⏸️⏸️
சப்போட்டா பழ ஜூசுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். இது பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மயக்கத்தை போக்குகிறது. சப்போட்டா பழத்துடன் உரு டீஸ்பூன் சீரகம் கலந்து சாப்பிட பித்தம் நீங்கும். 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்
⏸️⏸️⏸️⏸️⏸️
சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கும் சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.
⏸️⏸️⏸️⏸️⏸️
கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் தினமும் இரண்டு சப்போட்டாப் பழங்களை சாப்பிடுவதன்மூலம் பலன் கிடைக்கும் ஆக. உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். அத்துடன் ரத்த நாளங்களை சீராக வைத்திருப்பதோடு இதயக்கோளாறுகளை சரி செய்யும் ஓர் இயற்கை நிவாரணி என்று அமெரிக்க ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறதுஇதுதவிர வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு தருகிறது.
⏸️⏸️⏸️⏸️⏸️
பித்தம் நீங்க
சிலருக்கு பித்தத்தினால் அடிக்கடி தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதனை நீக்க சப்போட்டா பழத்தை சாப்பிட்டு பின்னர் ஒரு ஸ்பூன் சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் நீங்கும்
⏸️⏸️⏸️⏸️⏸️
சாதாரண காய்ச்சல் குணமாக
சப்போட்டா பழச்சாறை குடித்துவிட்டு, சிறிது சுக்கு, சித்தரத்தை பொடி, கொஞ்சம் கருப்பட்டி, இவைகளை ஒன்றாக சேர்த்து பொடியாக்கி தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி குடித்துவர சாதாரண காய்ச்சல் குணமாகும்
⏸️⏸️⏸️⏸️⏸️
கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் தினமும் இரண்டு சப்போட்டாப் பழங்களை சாப்பிடுவதன்மூலம் பலன் கிடைக்கும். ஆக. உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். அத்துடன் ரத்த நாளங்களை சீராக வைத்திருப்பதோடு இதயக்கோளாறுகளை சரி செய்யும் ஓர் இயற்கை நிவாரணி என்று அமெரிக்க ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.இதுதவிர வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு தருகிறது.
⏸️⏸️⏸️⏸️⏸️
கூர்மையான கண் பார்வைக்கு சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல கண் பார்வையை பெறலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது நம் கண்களை ஆரோக்கியமாக வைப்பதோடு கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்கிறது. ஆரோக்கியமான எலும்புகள் பெற கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இந்த சப்போட்டாவில் அதிக அளவு உள்ளது சத்துக்களின் குறைபாட்டின் காரணமாக நம் எலும்புகளானது ஆற்றலை இழக்கின்றதுசப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சக்தி அதிகரிக்கப்பட்டு எலும்புகள் வலுவடைகிறது மலச்சிக்கல் நீங்க சப்போட்டாவின் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது இது உடலின் குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
⏸️⏸️⏸️⏸️⏸️
நம் குடலானது ஆரோக்கியமாக செயல்படும் போது மலச்சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லைகர்ப்பிணி பெண்களுக்கு சப்போட்டாவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் மற்ற சத்துக்கள் அதிகளவு உள்ளதால் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலிற்கு இயற்கையாகவே ரத்தத்தை உறையவைக்கும் சக்தி வந்துவிடும். மன அழுத்தம் நீங்க நம் உடலில் இருக்கும் நரம்புகளை அமைதிப்படுத்தும் தன்மையானது சப்போடாவிற்க்கு உள்ளது
⏸️⏸️⏸️⏸️⏸️
இந்த சப்போட்டாவை தொடர்ந்து உண்டு வந்தால் தூக்கமின்மை, பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
⏸️⏸️⏸️⏸️⏸️
முழுமையாக பழுத்த சப்போட்டாவை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை. முறையற்று பழுக்காத சப்போட்டாவை உட்கொண்டால், சில விளைவுகளை சந்திக்க நேரிடும்.
பழுக்காத சப்போட்டா பழத்தை சாப்பிடுவது வாயில் கசப்பான சுவையை ஏற்படுத்தும் இதில் அதிக அளவு லேடெக்ஸ் மற்றும் டானின் உள்ளது
அவை வாயில் புண்களை ஏற்படுத்தும்
இதனால் தொண்டை அரிப்பு ஏற்படலாம்
அஜீரண பிரச்சினை ஏற்படலாம்
சப்போட்டா விதைகளை உட்கொள்வது வயிற்று வலியை ஏற்படுத்தும் ஏனெனில், இதில் சப்போடின் மற்றும் சபோடினின் ரசாயனம் உள்ளது.
சப்போட்டா இலைகளை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு மற்றும் சருமத்தில் லேசான அரிப்பு ஏற்படலாம் இதில் சப்போனின் உள்ளது.
⏸️⏸️⏸️⏸️⏸️
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🦚🦚🦚🦚🦚
நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480, 6383487768.
((வாட்ஸ் அப்)) 7598258480
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9489666102.
No comments:
Post a Comment