Monday, June 7, 2021

✍🏻🍝🍝இயற்கை வாழ்வியல் முறை🍝🍝உணவும்-உணர்வும்.

✍🏻🍝🍝இயற்கை வாழ்வியல் முறை🍝🍝உணவும்-உணர்வும்.

🍝🍝🍝🍝🍝🍝🍝🍝

உண்பது, நம் நாக்கின் சுவைக்காகவோ அல்லது வயிற்றை நிரப்பிக் கொள்ளவோ அல்ல. நம் உடல் ஆற்றல் பெறத்தான்! நாம் தினமும் என்ன சாப்பிடுகிறோம், எப்போது சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை தொடர்ந்து கவனித்தால், நம் உணவு பழக்கம் ஆரோக்கியமானதா, இல்லையா என்பதை நாமே மதிப்பீடு செய்து கொள்ளலாம்.

ஆரோக்கியமே மிகச்சிறந்த செல்வம், அது நிலைக்க வேண்டும் என, ஒவ்வொருவரும் விரும்புகிறோம். 

🍝🍝🍝🍝🍝🍝🍝

நிறைய பேருக்கு சாப்பாடு என்றால் இஷ்டம்; சாப்பிடுவது சுகமானது. சில பெண்கள், மனக்கவலையை மறக்க தட்டில் நிறைய சாப்பாட்டை போட்டு சாப்பிட உட்கார்ந்துவிடுவர். ஆனால், இதுவே பழக்கமாகிவிட, அது ஒரு, தனி மன அழுத்தத்தை கொடுத்துவிடும். இதன் மூலம் கிடைப்பதாய் நினைக்கும் மகிழ்ச்சி, ஆபத்தில் தான் கொண்டுபோய் விடும்.

இலையில் உணவை வீணாக்குவது எப்படி தேசிய இழப்பு என்று சொல்கின்றனரோ, அதே போல், தேவைக்கு அதிகமாய் உண்பதும் தேச குற்றம் தான். வயிறு குப்பைத்தொட்டி அல்ல! என் தோழி ஒருத்தி, உணவு உண்ட ஒருசில நிமிடத்திலேயே, மயக்க நிலைக்கு போய்விடுவாள். 'உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு' என்கிற மாதிரியே இருப்பாள். இப்படி சாப்பிட்ட அடுத்த நொடியே, தூக்கம் வருகிறது என்றால், ஏதோ உடல் பிரச்னை என்று அர்த்தமாம். 

உறக்கம் வரக்கூடாதாம்!: உணவு நிபுணரை கேட்டால், 'உண்டதும், உடம்பு சுறுசுறுப்பு தான் அடையணுமே தவிர, இப்படி உறக்கம் வரக் கூடாது; அப்படியென்றால் அது நல்ல உணவு இல்லை. சரியான உணவைப் பற்றிய அறிவு நமக்கு இல்லை. உயிர் ஆற்றலை வளர்த்துக் கொள்ளத்தான் உணவே தவிர, உண்டதும் நம்மை கவிழ்த்து போட அல்ல' என்று சொல்கின்றனர். திருப்தியான ஆரோக்கியமான உணவு என்பது. வயிறு நிறைய முழு திருப்தியோடு சாப்பிடுவதில்லை. மிகவும் பிடிக்கிறது என்பதற்காக அதிகமாகவோ, பிடிக்கலை என்பதற்காக சுத்தமாய் விட்டு விலகுவதோ சரியில்லை. கொழுப்பு உணவுகள் உடம்புக்கு நல்லதில்லை; ஆனால், நல்ல கொழுப்பு, நம் இதயம் மற்றும் திசுக்கள் வளர்ச்சிக்கு அவசியம். தலைமுடி, நகம், சருமம் திடமாய் வளர, 'ஒமேகா' என்கிற கொழுப்பு உள்ள உணவுகள் அவசியம். வெவ்வேறு வகையான புத்துணர்ச்சி தரும் உணவு வகைகளை, உணவுப்பழக்கத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.

நாவின் சுவைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், சத்தான உணவு என்பது, தற்போது சத்து மாத்திரையாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தெரிந்து கொள்ள, நாம் உணவு உண்ணும் பயிற்சி முகாமிற்கு செல்ல வேண்டிஉள்ளது. எப்போதும் பரபரப்பு என்பதால், உணவு பசிக்காக உண்பது போல் ஆகிவிட்டது. இதனால் நமக்கு, 40 வயதை தாண்டியதும் ஏதோ ஒரு நோயின் தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் உள்ளது.

🍝🍝🍝🍝🍝🍝🍝🍝 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்பர். நல்ல உணவை பார்த்தவுடன் தட்டு நிறைய சாப்பிட தோன்றும். ஆனால், அவ்வாறு சாப்பிடுவதை தவிர்க்கணும். மாறாக, அளவாகச் சாப்பிட்டு பழகவேண்டும்.

🍝🍝🍝🍝🍝🍝🍝🍝

அதிலும், இலையில் வைத்தவுடனே சாப்பிட ஆரம்பித்துவிடுவதும் நல்லதல்ல. வாத பித்தம் நீக்கும் தயிர் முதலில் இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு முடித்தவுடன், கடைசியில் துவர்ப்பு சாப்பிடணும். இதை பெரியவர்கள் காரணமில்லாமல் கடைபிடிக்கலை. இப்படி ஒவ்வொரு சுவையாக சாப்பிடுவதால் தான் உடம்பில் இருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். உணவின் கடைசியில் தயிர் சேர்ப்பதும், வாத பித்தம் நீங்குவதற்கு தான்.

Thamarai TV

🍝🍝🍝🍝🍝🍝🍝🍝

பசிக்கும் போது மட்டும் உணவருந்துங்கள். ஏப்பம் வந்தபின் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். அப்படி ஏப்பம் வந்தால் தான், நீங்கள் சரியான முறையில் சாப்பிடுகிறீர்கள் என்று அர்த்தம். பதறாத காரியம் சிதறாது என்பர். ஆகவே முடிந்த வரை மெதுவாகச் சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். இது உடலுக்கு மிகவும் நல்லது. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்; இது தெரிந்தவர்களுக்கு நோய் வர வாய்ப்பில்லை. காய்ந்த வயிறுகள் இருக்கும் இடங்களில் அவற்றை ஈரப்படுத்துவதும், உப்பிப் பருத்துப் போன இடங்களில் அவற்றை காயப்போடு என்பதும் தான் முறையானது. சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான உணவுவை, சரியான முறையில் எடுத்துக் கொள்ளாதது தான், அனைத்து உடல் உபாதைகளுக்கும் காரணம். பட்டினியால் இறப்போரைவிட, சாப்பிடும் விதம் தெரியாமல் முறையற்ற பழக்கத்தால் உயிர் இழப்போர் தான் அதிகமாம். சின்னச்சின்ன விஷயங்களில் நாம் காட்டும் அலட்சியமும், புறக்கணிப்புமே பெரிய பிரச்னையை உண்டு பண்ணி விடுகிறது. இதெல்லாம் நீங்கள் கேள்விப்படாதது அல்லது படிக்காதது என்று நினைத்துக் கொண்டு சொல்ல வரவில்லை. 


நல்ல விஷயங்களை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லதுதான். காலம் தான் முழுமுதற் காரணம் மருத்துவ அறிவியல், உடலறிவியல் பெருமளவு வளர்ந்து விட்டதாகக் கூறப்படும் இந்நாளில், சமூகம் முன்னெப்போதையும் விட மிகுந்த ஆரோக்கியத்துடன் விளங்க வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக மருத்துவமனைகளும், மருத்துவ சாதனங்களும் பெருகிக் கொண்டே போகின்றன. இதற்கு காரணம் பலவற்றைக் கூறினாலும், உண்ணும் உணவும், முறையும், அளவும், காலமும் தான் முழு முதற் காரணம். நாம் அன்றாடம் உண்ணும் உணவில், சில சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், பெருமளவிற்கு நம் உடல்நலனைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

🍝🍝🍝🍝🍝🍝🍝🍝

திருப்தியான ஆரோக்கியமான உணவு என்பது. வயிறு நிறைய முழு திருப்தியோடு சாப்பிடுவது இல்லை. மிகவும் பிடிக்கிறது என்பதற்காக அதிகமாகவோ, பிடிக்கலை என்பதற்காக சுத்தமாய் விட்டு விலகுவதோ சரியில்லை. கொழுப்பு உணவுகள் உடம்புக்கு நல்லதில்லை; ஆனால், நல்ல கொழுப்பு, நம் இதயம் மற்றும் திசுக்கள் வளர்ச்சிக்கு அவசியம்.

வாழ வைக்கும் இலை ! | Living leaf! - Dinakaran

🍝🍝🍝🍝🍝

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...