Monday, June 7, 2021

தீபாவளி வரை ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்-பிரதமர்.

தீபாவளி வரை ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்-பிரதமர்.

கொரோனா தொற்று நாட்டில் பரவத் தொடங்கியது முதல் பலமுறை நாட்டுமக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இதற்கு முன்பு கொரோனாவை விரட்ட உறுதியேற்கும் விதமாக 2020 ஏப்ரலில் அகல் விளக்கேற்ற பிரதமர் வலியுறுத்தினார். முதல் அலையின்போது உரையாற்றிய பிரதமர் ரூ.20 லட்சம் கோடி சுயசார்பு இந்தியா திட்டத்தை அறிவித்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது முன்களப் பணியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டுகோள் விடுத்தார். மேலும் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறைவு என்றார்.

தற்போது கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்துவரும் நிலையில் பிரதமர் மோடியின் உரையாடி இருக்கிறார்.

பிரதமர் பேசும்போது, "உலகத்தின் பெரும்பாலான நாடுகள் கொரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 100 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரும் நோய்த்தொற்று உலக மக்களை பாதித்துவருகிறது. கொரோனாவால் நம்மில் பலர் அன்பிற்குரியவர்களை இழந்திருக்கிறோம். இந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்றால் நாம் பல பாடங்களைக் கற்றுவருகிறோம்.

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவு நாம் செய்திருக்கிறோம். அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்தி ஆக்சிஜனை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்றுள்ளோம். மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் நிரம்பிவழியும் நிலையைக் கண்டுள்ளோம். இந்த தொற்றால் மருத்துவத் துறையில் அடிப்படை வசதிகளை நாம் மேம்படுத்தியுள்ளோம். ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ தேவைகளை அவசரகதியில் எடுத்துச்செல்லும் வசதி பெற்றிருக்கிறோம். வெளிநாடுகளில் இருந்து தேவையான மருந்துகள் அனைத்தையும் கொண்டுவந்துள்ளோம்.

கொரோனா என்ற அரக்கனை ஒழிப்பதற்காக முகக்கவசம், ஆக்சிஜன் ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம். மக்களை காப்பாற்றுவதற்காக நாட்டின் முப்படைகளையும் பயன்படுத்தினோம்.

கொரோனா நமது மிகப்பெரிய எதிரி; அதை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். எனவே தடுப்பூசியை இதற்குமுன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம். வரலாற்றில் இல்லாத அளவுக்கு தடுப்பூசி உற்பத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளோம். தடுப்பூசி மூலம் பல லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனையை தொடங்கியுள்ளோம். நாட்டுமக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க கடைசிவரை தடுப்பூசியை கொண்டுசெல்ல வேண்டியது நம் கடமை. எனவே எப்போதும் கிடைக்கும்வகையில் தடுப்பூசி உற்பத்தி நிரந்தரமாக இருக்கும்.

தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. ஆனாலும், ஒரே ஆண்டில் இந்தியா இரண்டு தடுப்பூசிகளை அறிமுகம் செய்திருக்கிறது. தடுப்பூசி மட்டும் சரியான நேரத்திற்கு தயாராகாமல் இருந்திருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளன. இதுவரை 23 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

இந்தியா குறித்த உலக நாடுகளின் சந்தேகங்களுக்கு தடுப்பூசி மூலம் தீர்வு கண்டிருக்கிறோம். கொரோனாவுக்கு எதிரான போரில் உலக அரங்கில் இந்தியா முன்களத்தில் நின்று போராடிவருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி தயாரிப்பதற்கு முன்பே முன்களப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றினர்.

இந்தியாவில் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏழைகள் மீதுள்ள கவலை காரணமாக மத்திய அரசு விரைந்து தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. தடுப்பூசிக்கான ஏற்பாடுகளை கடந்த ஏப்ரலிலேயே மத்திய அரசு தொடங்கிவிட்டது. வரும் நாட்களில் தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கப்படும். 3 தடுப்பூசிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். இதனால் கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும். மேலும் மூக்கில்விடும் வகையிலான கொரோனா தடுப்பு சொட்டுமருந்து விரைவில் வரும். 7 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உள்ளன; அவற்றில் 3 நிறைவடையும் நிலையில் உள்ளன.

மாநிலங்கள் நாங்கள் ஏன் தடுப்பூசியை தயாரிக்கக்கூடாது என கேள்வி எழுப்புகின்றன. மத்திய அரசு, தடுப்பூசி விஷயத்தில் மாநிலங்களுகு வகுத்துள்ள விதிகளின்படியே தொடர்ந்து செயல்படுகிறது. பொதுமுடக்கம் மற்றும் தளர்வுகள் குறித்து முடிவெடுப்பதை மாநில அரசுகளிடமே விட்டுள்ளோம். தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே அதிகளவில் உற்பத்தி செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப தடுப்பூசி கொள்கைகளில் அவ்வப்போது மாற்றம் செய்கிறோம். ஏப்ரல் மாத இறுதிவரை மட்டுமே மத்திய அரசு தடுப்பூசி விநியோகத்தை மேற்கொண்டு வந்தது. மே மாதம் முதல் தடுப்பூசி கொள்கையில் மாநிலங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தடுப்பூசி விநியோகத்தில் மத்திய அரசே இனி முடிவெடுக்கும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக விநியோகம் செய்யப்படும். தடுப்பூசி விநியோகத்திற்கான மாநில அரசுகளின் 25% பங்கையும் மத்திய அரசே ஏற்கும். தடுப்பூசிக்காக மாநில அரசுகள் இனி செலவழிக்கத் தேவையில்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 சதவிகிதத்தை தனியார் மருத்துவமனைகள் வாங்கி மக்களுக்கு செலுத்தலாம். இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். ஜூன் 21ஆம் தேதிமுதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கத் தொடங்கும்.

தீபாவளிவரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். அதன்படி நவம்பர் மாதம்வரை 80 கோடி பேருக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.  

Source By: Puthiyathalaimurai



இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse புதன்கிழமை அக்டோபர் 2- ம் தேதி   வானத்தில் தோன்றவுள்ளது . பூமிக்கும் சூரிய...