Wednesday, June 9, 2021

✍🏻🪑🪑இயற்கை வாழ்வியல் முறை🪑🪑வரகு அரிசியின் நன்மைகள்.

✍🏻🪑🪑இயற்கை வாழ்வியல் முறை🪑🪑வரகு அரிசியின் நன்மைகள்.

🪑🪑🪑🪑🪑

இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உட்கொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது.

🪑🪑🪑🪑🪑

அபரிமிதமான ஊட்டச்சத்து நிறைந்தது

நமது உடல்நிலை நான்றாக இருக்க நமக்கு தேவையான அளவு தாது உப்புக்கள் இரும்பு சத்து வைட்டமின்கள் சுண்ணாம்பு சத்து பாஸ்பரஸ் கால்சியம் சத்துக்கள் போன்றவை மிகவும் அத்தியாவசியமாகும். மேற்கண்ட இந்த சத்துக்கள் யாவும் வரகரிசியில் நிறைந்துள்ளது. வரகரிசி பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் குறைவின்றி கிடைக்கும்.

🪑🪑🪑🪑🪑

அரிசி கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம் மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.

வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன மேலும் விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்

🪑🪑🪑🪑🪑

தற்போது பொதுவாக சிறுதானியங்களின் மேல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதால் வரகின் பயன்பாடு மெல்ல கூடிக்கொண்டு வருகின்றது.

🪑🪑🪑🪑🪑

சீறுநீரகத்தின் செயல்பாடு மேம்படும்

கோடைகாலங்களில் வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுகும் மேலும் சீறுநீரகங்கள் சிறுநீர் வழியாக உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

🪑🪑🪑🪑🪑

இதய ஆரோக்கியம் மேம்படும்

இதயம் சீராக வேலை செய்வதற்கு இருக்க சத்துமிக்க உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம் வரகரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. வரகரிசி உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியம் மேம்படும்.

🪑🪑🪑🪑🪑

இரத்தம் சுத்தமடையும்

வரகரிசியை சாப்பிடுவதால் ரத்தத்தில் ஊட்டச்சத்துகள் அதிகரிக்கும். இது ரத்தத்தை தூய்மைப்படுத்துவதோடு ரத்த ஓட்டத்தை சீராக்கும். எனவே ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்  வரகரிசி மூலம் செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

🪑🪑🪑🪑🪑

ஆண்மை குறைபாடுகள் நீங்கும்

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பலருக்கும் வேலைசுமை குடும்ப பிரச்சனை காரணமாக மனஅழுத்தம் மற்றும் கவலைகள் அதிகம் ஏற்படுகிறது அதிக மனஅழுத்தம், கவலை காரணமாக ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது இவர்கள் வரகரிசியை சாப்பிடுவதன் மூலம் ஆண்மை குறைபாட்டை போக்க முடியும்.

🪑🪑🪑🪑🪑

மலச்சிக்கலை போக்கும்

வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து மிகவும் அதிகம்

🪑🪑🪑🪑🪑

உடல் எடையை குறைக்கும்

இன்றைய காலத்தில் பலரும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் எடையை குறைக்க நார்ச்சத்து அதிகம் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய உணவுபொருட்களை சாப்பிடுவது அவசியம். வரகரிசியில் இத்தகைய நார்சத்து கொண்ட கொழுப்பை கரைக்கக்கூடிய பொருட்கள் உள்ளன வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும்.

🪑🪑🪑🪑🪑

நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்

இன்று உலகில் பெரும்பலனோருக்கு இருக்கும் ஒரு நோய் நீரிழிவு நோயாகும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நமது உடல் இயற்கையிலேயே இன்சுலின்ஐ சுரக்கும் வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்

உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும். 

🪑🪑🪑🪑🪑

மூட்டுவலியை குறைக்க உதவுகிறது.

கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு

நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும்.

🪑🪑🪑🪑🪑

மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.

🪑🪑🪑🪑🪑

வரகை அரிசியில் இட்லி மற்றும் தோசைகளில்  உப்புமா பொங்கல் புளியோதரையாக செய்தும் சாப்பிடலாம்

🪑🪑🪑🪑🪑

வரகை சரியாக தோல் நீக்கம் செய்யாவிட்டால், தொண்டையில் அடைத்துக் கொண்டு ஒருவிதமான ஒவ்வாமையை உண்டாகும்.

வரகு அரிசியை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் !! - tiktamil

🪑🪑🪑🪑🪑

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

2 comments:

  1. தெரியாத பலவும் இன்று வரகு அரிசி பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி...

    ReplyDelete

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...