✍🔹🔹இயற்கை வாழ்வியல் முறை🔹🔹மருதாணியின் நன்மைகள்.
🔹🔹🔹🔹🔹
மருதாணி இவற்றின் இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை மருத்துவ பயன்களை கொண்டது. மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்கள் கிடைகின்றன.
🔹🔹🔹🔹🔹
மருதாணி இலைகள் தசை இறுக்கும் தன்மை கொண்டது. அதிக இரத்தப்போக்கினை தடுக்கும். மாதவிடாய் சுலபமாய் இருக்க உதவும். பெண்களின் வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாயில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஆகியவற்றை தீர்க்கும்
🔹🔹🔹🔹🔹
கால் எரிச்சலைத் தடுக்க இலைகளை அரைத்து பசையாக வைப்பதின் மூலம் அவர்றை சரிசெய்யலாம். தொண்டை கரகரப்புக்கு கொப்பளிப்பு நீராகும். இலைகளின் வடிசாறு, அல்லது கசாயம் வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதியினை கட்டுப்படுத்தும்.
🔹🔹🔹🔹🔹
உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.
🔹🔹🔹🔹🔹
மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும். கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும்
🔹🔹🔹🔹🔹
மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை.
🔹🔹🔹🔹🔹
மருதாணி இட்டுக் கொண்டவதால் சிலருக்கு சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
🔹🔹🔹🔹🔹
ஆறாத வாய்ப்புண் அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம்.
🔹🔹🔹🔹🔹
இளநரையை அகற்றும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.
🔹🔹🔹🔹🔹
6 தேக்கரண்டி அளவு புதிதாக சேகரித்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் குணமாக்கும்.
🔹🔹🔹🔹🔹
மருதாணி இலைகளுடன் சிறிதளவு பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, கால் நகங்களின் மீது வைத்து, காய்ந்த பின்னர் உறங்கி காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒரு முறை செய்து வர நகம் சொத்தையாவது அழுக்குடன் பளபளப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பிரச்சனைகள் தீரும் மேலும் நகம் தொடர்பாக ஏற்படும் எந்த நோயானாலும் தடுக்கப்படும்.
🔹🔹🔹🔹🔹
மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாகும்.
🔹🔹🔹🔹🔹
சிறிதளவு மருதாணிக் கொழுந்தை நீரில் இட்டு ஊற வைக்க வேண்டும். 1 மணி நேரம் ஊறிய பின்னர் இந்த நீரைக் கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும் இந்த கஷாயத்தால் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் தீரும்
🔹🔹🔹🔹🔹
மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்டுவது சிறந்த முறையாக பாரம்பரிய மருத்துவத்தில் இன்றும் இருந்து வருகின்றது.
🔹🔹🔹🔹🔹
மருதாணி விதை எண்ணெயை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும் மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்
🔹🔹🔹🔹🔹
மருதாணி இலை மற்றும் மலர்கள் குஷ்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இந்த தகவல்கள் மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
🔹🔹🔹🔹🔹
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🦚🦚🦚🦚🦚
நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480, 6383487768.
((வாட்ஸ் அப்)) 7598258480
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9489666102.
இது போன்ற தகவல் பெற
super sir👌👍
ReplyDeleteThank you
Delete