Thursday, June 10, 2021

✍🏻🏞️🏞️இயற்கை வாழ்வியல் முறை🏞️🏞️கேழ்வரகின் நன்மைகள்.

✍🏻🏞️🏞️இயற்கை வாழ்வியல் முறை🏞️🏞️கேழ்வரகின் நன்மைகள். 


ராகி என்னும் கேழ்வரகைப் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இந்த ராகி பெரும்பாலானோருக்கு பிடிக்காது. ஏனெனில் ராகியானது அவ்வளவு சுவையாக இருக்காது. அதிலும் ராகி  சாப்பிட வேண்டுமானால், கடித்து சாப்பிட முடியாது, மாறாக அதனை அப்படியே விழுங்க வேண்டும். இதனால் ராகி  சாப்பிட பலர் தவிர்ப்பார்கள். ஆனால் இந்த ராகி  எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.

🏞️🏞️🏞️🏞️🏞️

ஆரோக்கியமான எலும்புகளைப் பெறுவதற்கு


கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுப்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது. மேலும் இந்த ராகி  கோடைகாலத்தில் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் இது உடலின் வெப்பத்தைத் தணிக்கும். மேலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.

🏞️🏞️🏞️🏞️🏞️

உடல் எடையைக் குறைப்பதற்கு

கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வைக் குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வைத் தருகிறது. இதனால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை தடுக்க முடிகிறது.

🏞️🏞️🏞️🏞️🏞️

நீரிழிவு நோயைக் குணப்படுத்த உதவுகிறது

கேழ்வரகில் உள்ள தாவரவகை ரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது 

🏞️🏞️🏞️🏞️🏞️

ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதற்கு

கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றிகொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. 

🏞️🏞️🏞️🏞️🏞️

ரத்த சோகையைக் குணப்படுத்த உதவுகிறது

கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, ரத்த சோகை நோயைக் குணப்படுத்த உதவுகிறது. 

🏞️🏞️🏞️🏞️🏞️

சோர்வைப் போக்க உதவுகிறது

கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெறச் செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையைப் போக்க உதவுகிறது. அது மட்டுமின்றி, ஒற்றைத் தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. 

🏞️🏞️🏞️🏞️🏞️

புரதச்சத்து

அமினோ அமிலங்கள்

உடலின் இயல்பான செயல்பாட்டிலும், சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், அமினோ அமிலங்களுக்கு பெரும் பங்கு உள்ளது மற்றும் உடலில் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது. 

🏞️🏞️🏞️🏞️🏞️

உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த உதவுகிறது

கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் கல்லீரல் நோய்கள் இதய நோய் ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும் இவ்வளவு நோய்களை சரிசெய்யும் கேழ்வரகை ஆரோக்கிய டானிக் என்றே சொல்லலாம் 

🏞️🏞️🏞️🏞️🏞️

உடலுக்கு சக்தியினை அளிக்கும்

கடினமான உடல் உழைப்பு உள்ளவர்கள் கேழ்வரகினை உண்டு வந்தால் அவர்கள் தங்கள் வேளைகளில் மேலும் சிறந்து விளங்க கேழ்வரகு அவர்களுக்கு சக்தியினை அழுக்கும்

இதனால் தான் கல் உடைப்பவர்கள், விவசாய வேலை செய்பவர்கள் கேழ்வரகு உணவினை உட்கொள்கின்றனர்.

🏞️🏞️🏞️🏞️🏞️

குழந்தைக்கு சிறந்த உணவு ராகியோடு சில சத்து நிறைந்த பொருட்கள் கலந்து சத்து மாவு தயாரித்து தினமும் குழந்தைக்கு ஊட்டுவதால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எளிதில் ஜீரணமாகிவிடும்

🏞️🏞️🏞️🏞️🏞️

உடலுக்கு ஓய்வு தரும்  ராகியை உண்பதால் உடல் ஓய்வு நிலையை அடையும் இதில் இருக்கும் அமினோ ஆசிடால் மன அழுத்தம், தலைவலி, இன்சோம்னியா போன்ற நோய்கள் குணமாகும்

🏞️🏞️🏞️🏞️🏞️

பாலில்  உள்ள கால்சியத்தை  விட  இதில் அதிகம் உள்ளன கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும்.

🏞️🏞️🏞️🏞️🏞️

உடல் சூட்டை  தனிக்கும்

குழந்தைகளுக்கு  கேழ்வரகுடன்  பால் ,சர்க்கரை  சேர்த்து  கூழாக காய்ச்சி கொடுக்கலாம் . இது  குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது

🏞️🏞️🏞️🏞️🏞️

தினம் கேழ்வரகு  கூழ்  சாப்பிட்டு வர குடற்புண்  குணமடையும்

🏞️🏞️🏞️🏞️🏞️

மாதவிடாய்  கோளாறு  கொண்ட பெண்கள்  இதை சாப்பிட்டு வர குணமடையும்

🏞️🏞️🏞️🏞️🏞️

இது  ஜீரணமாகும்  நேரம்  எடுத்து கொள்வதால் கேழ்வரகு சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த உணவாகும் சர்க்கரை  நோயாளிகள்  கேழ்வரகை  ,அடை ,புட்டாக செய்து  சாப்பிடலாம். கூழ்  அல்லது  கஞ்சியாக  சாப்பிடக்கூடாது  .இது சிக்கிரம்  ஜீரணம்  அடைந்து விடும் கூழாக  குடிக்கும் போது கொலஸ்டிராலை  குறைக்கும்

இதில்  இரும்பு  சத்து அதிகம்  உள்ளது  இது இரத்த சோகை  நோய்  வரமால்  தடுக்கிறது. 

🏞️🏞️🏞️🏞️🏞️

இதில் அதிக அளவு  கால்சியம், இரும்பு  சத்து அதிகம் உள்ளன கர்ப்பிணி பெண்கள்  தினம் உணவில் சேரத்து  கொள்ளலாம்.

🏞️🏞️🏞️🏞️🏞️

இயற்கை உணவு தானியங்களுடன் இணைந்து வாழ்ந்த மனித சமுதாயம் அன்று நோயற்ற வாழ்க்கை முறையை இனிதே அனுபவித்து வந்தது. ஆனால் இன்றோ எந்திர வாழ்க்கை, நேரமின்மை, பணிச்சுமை, பணத்தை மட்டுமே பரிச்சயமாக பார்க்கும் எண்ணம் போன்ற எண்ணற்ற காரியங்களால் இயற்கை உணவை அறவே மறந்து செயற்கை உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். 

🏞️🏞️🏞️🏞️🏞️

எனவே நமது பண்டைய வாழ்க்கையை முழுமையாக கடைபிடிக்காவிட்டாலும் இயற்கை தானியங்களை இயன்றளவு நம்முடைய உணவில் சேர்த்துக்கொண்டால் நோயின் தாக்கத்தில் இருந்து சற்றே தப்பித்துக்கொள்வதோடு, உடலுக்கு தேவையான அதீத சக்திகளையும் பெற்றுக் கொண்டு இனிதே வாழலாம்.

🏞️🏞️🏞️🏞️🏞️

பின்குறிப்பு   இதில் ஆக்ஸாலிக்  அமிலம்  அதிகம்  உள்ளதால் ,சிறுநீரக  கற்கள் உள்ளவர்கள்  இதை தவிர்ப்பது  நல்லது.

இதயத்தை பாதுகாக்கும் புற்றுநோய் கிருமிகளை தடுக்கும் : கேழ்வரகில் இருக்கும்  நன்மைகள் , health benefits of ragi– News18 Tamil

🏞️🏞️🏞️🏞️🏞️

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...