Sunday, July 4, 2021

✍🌾🌾இயற்கை வாழ்வியல் முறை🌾🌾இயற்கையை வணங்குவோம்; விவசாயம் காப்போம்

🌾🌾இயற்கை வாழ்வியல் முறை🌾🌾இயற்கையை வணங்குவோம்; விவசாயம் காப்போம்.

  🌾🌾🌾🌾🌾🌾

ஆதி காலத்தில் இடி, மின்னல், மழை, வெள்ளம் என இயற்கை சீற்றங்கள் மீது ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே வழிபாடு என்ற ஒன்றே தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆரம்ப காலங்களில் பயத்தினால் இறை/இயற்கை வழிபாடு தோன்றியது என்றாலும், காலப்போக்கில் அது இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாகவும் மாறியிருந்தது.  

🌾🌾🌾🌾🌾🌾

அதேபோல தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டற கலந்த வழிபாட்டு முறையில், விவசாய பொருட்களுக்கே, அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. குறிப்பாக இயற்கையை பாதுகாக்க, ஒவ்வொரு கிராமத்திலும் கோயில்களைச் சுற்றிலும் அந்த இடத்துக்கே உரித்தான தாவரங்கள், கால்நடைகள், பறவைகள், நீர்த்தேக்கங்களை உள்ளடக்கிய பாதுகாக்கப்பட்ட சிறிய வனப் பகுதிகள் உருவாக்கப்பட்டன. அவையே கோயில் காடுகள் என்றும் அழைக்கப்பட்டன. மேலும் பல கோயில்களிலும் எண்ணற்ற பலன்களைத் தரும் வேப்பமரம், வில்வமரம், அரசமரம் போன்ற மரங்கள் பாதுகாக்கப் படவேண்டும் என்ற நோக்கில் தல விருட்சமாக வைத்து வழிபடுகின்றனர்.

🌾🌾🌾🌾🌾🌾

கோயில் கோபுரம்  வழிபாட்டில் விவசாயம்

இறைவனை எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகிறோம். அந்த எண்ணெய் எள்ளில் இருந்து கிடைக்கிறது. அரிசியால் நைவேத்தியம் செய்கிறோம். இப்படி  நாம் படைக்கும் பூஜை பொருட்களிலிருந்து, உடைக்கும் தேங்காய் வரை அனைத்தும் இயற்கை விவசாயபொருள்கள்தான். இறைவனை வழிபட, நன்றியை வெளிப்படுத்த ஒரு சாதனமாக இருந்ததும் இந்த விவசாய விளைபொருள்கள்தான்.

🌾🌾🌾🌾🌾🌾

கடவுளை வழிபட மட்டுமல்ல, கடவுள் உறையும் கோயிலையும் விவசாயப் பொருள்களை போற்றும் வகையில் அமைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். விவசாய தானியங்கள் அனைத்தும் ஒரு வேளை நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? என்று சிந்தித்த அவர்கள், அக்காலங்களில் ஊரில் சற்று உயரமாக  இருந்த கோயில் கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை என்று முடிவெடுத்துதான், கோயில் கோபுர கலசத்தில் வரகு போன்ற தானியங்களை வைத்திருக்கின்றனர். மேலும் விவசாயத்தின் மகிமையை, விவசாயத்தின் அவசியத்தை எடுத்துச் சொல்லும் வகையில்தான், கோயில் திருவிழாக்களில் முளைப்பாரி எடுப்பது போன்ற சடங்குகளை ஏற்படுத்தினர். விவசாயத்தை ஒரு வேள்வியாகச் செய்யும் உழவர்களைப் போற்றும் விதமாகத்தான் பொங்கல் திருநாளை உழவர் திருநாளாகக் கொண்டாடுகிறோம். விவசாயத்துக்குப் பயன்படும் பசுக்களையும், காளைகளையும் கூட வழிபடும் மரபினை ஏற்படுத்தினார்கள்.

🌾🌾🌾🌾🌾🌾

செழிப்பான வேளாண்மை  

இயற்கையையும் விவசாயத்தையும் புறக்கணித்து வாழமுடியாது என்பதை உணர்ந்ததால்தான், நம்முடைய முன்னோர்கள் விவசாயத்தை இறைவனுக்கு இணையாக வைத்துப் போற்றினார்கள். அதன் பலனாக இயற்கையும் தன்னுடைய கொடையை மக்களுக்கு தாராளமாகக் கொடுத்து, அவர்களை வளமாகவும், சுகமாகவும் வாழ வைத்தது.

🌾🌾🌾🌾🌾🌾

ஆனால், இன்று..?

நகர மயமாக்கல் என்ற பெயரில் விளைநிலங்கள் எல்லாம் கான்கிரீட் கட்டடங்களாக மாறி வருகின்றன. சுயநலத்தின் காரணமாக இயற்கை வளங்களை அழித்தனர்; மரங்களை வெட்டி வீழ்த்தினர். இதன் காரணமாக மழை பொய்த்து விவசாயம் நலிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. விவசாயிகள் செய்வது இன்னதென்று தெரியாமல் கையறுநிலையில் தவிக்கிறார்கள். நம் முன்னோர்கள் போற்றிய விவசாயிகளுக்கும், வேளாண் வளர்ச்சிக்கும் இன்றைய வழிபாட்டு முறையால் என்ன செய்ய முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகத்துக்கே உணவளிக்கும் விவசாயி கஷ்டப்படுவதை இறைவனே விரும்பமாட்டான். 

🌾🌾🌾🌾🌾🌾

கோயில்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் பொதுமக்களுக்கு அன்னதானம் செய்யும் கோயில் நிர்வாகமும் இந்து சமய அறநிலையத் துறையும், வழிபாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான மூலப் பொருட்களை விளைவித்துத் தரும் விவசாயிகளுக்கு, கோயில் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து விவசாயிகளுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை உருவாக்கலாம். அரசின் வேளாண்மைத் துறை மட்டுமல்லாமல், இந்து சமய அறநிலையத் துறையும் இது குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டு திட்டங்களைத் தீட்டி நடைமுறைப் படுத் தலாம்.

🌾🌾🌾🌾🌾🌾

விவசாயி

 விவசாயம் செழித்தால், விவசாயிகளின் குடும்பம் மட்டுமா பயன் பெறும்? ஒட்டுமொத்த உலகத்துக்கே அல்லவா உணவு கிடைக்கும்?! விவசாயத்தை பயிர்த்தொழிலாக நினைக்காமல் உயிர்காக்கும் கடமையாகச் செய்யும் விவசாயிகளைப் போற்றுவோம்; அவர்களின் கஷ்டங்களைத் தீர்க்கப் பாடுபடுவோம்.

Ryukyu Life: Springtime Plowing in Kin Town Okinawa

🌾🌾🌾🌾🌾🌾

கட்டுரை - ஜி.லட்சுமணன்.

🌾🌾🌾🌾🌾🌾

🌷🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse புதன்கிழமை அக்டோபர் 2- ம் தேதி   வானத்தில் தோன்றவுள்ளது . பூமிக்கும் சூரிய...