ஆலமரத்தில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பை கவனிக்கும் நாமக்கல்-ராசிபுரம் மாணவர்கள்.
ராசிபுரம் அருகே ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்பில் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளும் சூழலில், ஆபத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா முள்ளுக்குறிச்சி அடுத்து பெரப்பஞ்சோலை மற்றும் பெரிய கோம்பை கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன, இதனால் மாணவ மாணவிகள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் பெரப்பஞ்சோலை மற்றும் பெரிய கோம்பை சுற்றியுள்ள கிராமங்களில் செல்போன் டவர்கள் இல்லை, எனவே சிக்னல் கிடைக்காமல் கிராமப்புற மாணவ, மாணவியர் அங்கு உள்ள உயரமான ஆலமரத்தில் ஏறி கிளைகளில் அமர்ந்து ஆண்லைன் கிளாஸ் வகுப்பை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது என்றபோதிலும் உயிரை பணயம் வைத்து உயரமான மரங்களில் ஏறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது மாணவ மாணவியரின் பெற்றோரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இது போன்ற தகவல் பெற
https://chat.whatsapp.com/GU0BJhBILJc3oySzsedd6J
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
No comments:
Post a Comment