தமிழ் நாட்டில் நாளை முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு, நாளை வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுகின்றன. எனவே, கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் நான்கு மாவட்டங்களில் வழிபாட்டு தளங்களை திறக்க கடந்த வாரமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மற்ற 34 மாவட்டங்களில் திங்கள் கிழமை முதல் திறக்கப்படுகின்றன. இதற்காக வழிபாட்டு தளங்களை சுத்தப்படுத்தும் பணி மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
80 நாட்களுக்கு பிறகு தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்கள் வழிபட வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், இரண்டு அடி இடைவெளி விட்டு வட்டம் வரையப்பட்டுள்ளது. அறுபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது என்று, கோயில் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கோவிலில், வசந்த மண்டபத்தில் உள்ள, செடி, கொடிகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்றன.
பழனி முருகன் கோயிலில் காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இணையதலம் மூலமாக முன்பதிவு செய்து வர கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பத்து வயதிற்கு உட்பட்ட மற்றும் முதியவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியலூரில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் தனி மனித இடைவெளியுடன் நிற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு உள்ளே வரவும் வெளியே செல்லவும், தனித்தனியே வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை கோவிலில் தங்க
கொடிமரம் மற்றும் கோவிலின் முக்கிய பகுதிகள் அனைத்தும் தண்ணீர் பீச்சி அடித்து சுத்தம்
செய்யப்பட்டன. பக்தர்கள் தனி மனித இடைவெளியை
கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டன. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி
கோயிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில், கோவிலில்
உள்ள இருபத்தி இரண்டு புனித தீர்த்த தளங்களில்
நீராட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாமக்கல் மாவட்டம்
ராசிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர்
கோயிலை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி
பேராலயம் திறக்க மக்கள் வழிபடுவதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஐம்பது சதவிகித பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வழிபாடு செய்யவும், அவர்களுக்கு முகக்கவசம் வழங்குவதற்கும், கிருமி நாசினி வழங்குவதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளும், பேராலய நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் தொழுகை பந்தல் அமைப்பது புழுதி நிறைந்திருக்கும் தூண்களை தண்ணீர் கொண்டு கழுவும் பணிகள், உப்பு, கிணறு வழிபாட்டு கூடம், ஆண்டவர் சமாதி செல்லும் வரை பக்தர்கள் அமரும் இடம் போன்றவற்றை ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.
முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?
பலாப்பழம் சாப்பிட்டால் கிடைக்க கூடிய நன்மைகள்
இது போன்ற தகவல் பெற
https://chat.whatsapp.com/GU0BJhBILJc3oySzsedd6J
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
No comments:
Post a Comment