Thursday, August 19, 2021

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு புதுப்பிக்க 27-ஆம் தேதி கடைசி நாள்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு புதுப்பிக்க 27-ஆம் தேதி கடைசி நாள்.

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவா்கள், அப்பதிவை வரும் 27-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் பணி மூப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரா்கள் இந்த அரசாணை வெளியிட்ட நாளான மே 28 ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது வரும் 27-ஆம் தேதிக்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பதிவுதாரா்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் "2017,2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறிய மனுதாரர்கள் பயன் பெறுவதற்கு சிறப்பு சலுகை" தமிழக அரசால் இன்று அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாக பதிவினை புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ள முடியும்.

Website Link

Login ID: Your Registration Number

Password: Your Date of Birth (or) Your Registered Password

               [dd/mm/yyyy]



இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

No comments:

Post a Comment

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse புதன்கிழமை அக்டோபர் 2- ம் தேதி   வானத்தில் தோன்றவுள்ளது . பூமிக்கும் சூரிய...