Sunday, November 15, 2020

முகிலறையைக் (Wilson cloud chamber) கண்டுபிடித்தமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சார்ல்சு தாம்சன் ரீஸ் வில்சன் நினைவு தினம் இன்று (நவம்பர் 15, 1959).

முகிலறையைக் (Wilson cloud chamber) கண்டுபிடித்தமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சார்ல்சு தாம்சன் ரீஸ் வில்சன் நினைவு தினம் இன்று (நவம்பர் 15, 1959).

சார்ல்சு தாம்சன் ரீஸ் வில்சன் (Charles Thomson Rees Wilson) பிப்ரவரி 14, 1869ல் ஸ்காட்லாந்தில் மிட்லோத்தியன் என்ற ஊரில் ஜோன் வில்சன், அன்னி கிளர்க் ஆகியோருக்குப் பிறந்தவர். தந்தை ஒரு விவசாயி. 1873 ஆம் ஆண்டில் தந்தை இறக்கவே, இவரது குடும்பம் மான்செஸ்டருக்கு இடம்பெயர்ந்தது. ஓன்சு கல்லூரியில், உயிரியல் பட்டப் படிப்பை மேற்கொண்டார். பின்னர் கேம்ப்ரிட்ச், சிட்னி சசெக்சு கல்லூரியில் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களைக் கற்றார். பின்னர் இவர் வானிலையியலில் விருப்பம் கொண்டு, 1893ல் முகில் மற்றும் அதன் இயல்புகளை ஆராய்ந்தார். பென் நெவிசு என்ற இடத்தில் உள்ள வானியல் அவதான நிலையத்தில் பணியாற்றும் போது முகில்த் தோற்றம் பற்றி அவதானித்தார். இதனை அவர் பின்னர் கேம்பிரிட்சில் உள்ள ஆய்வுகூடத்தில் சிறிய அளவில் அடைக்கப்பட்ட கலன் ஒன்றில் ஈரப்பதன் கொண்ட வளிமம் மூலம் சோதித்தார். 


Top 30 Chamber GIFs | Find the best GIF on Gfycat

முகிலறை (Wilson cloud chamber) என்பது மின்னூட்டமுடைய துகள்களில் நீராவி எளிதில் படிகிறது எனும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கருவி. அயனியாக்கும் கதிர்கள் தான் செல்லும் பாதையிலுள்ள வளியினை அயனியாக்கும் பண்புடையன. கதிர்களின் பாதையைக் காணவும் படம் எடுக்கவும் இக்கருவி பயன்படுகிறது. அயனிகளைத் தனியாகக் காண முடியாது. எனினும் நீர் திவலையின் அடுக்கு ஒரு கோடு போல், அயனியின் பாதையைக் காட்டும். மீ தெவிட்டிய ஆவியில் இது நிகழும். வில்சன் இதனை முதன் முதலில் வடிவமைத்ததால் இது வில்சன் முகிலறை எனப்படுகிறது. இக்கண்டுபிடிப்புக்காக வில்சனுக்கு 1927 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.

Radioactive decay visualized in a Wilson Cloud Chamber - Imgflip 

1920கள் முதல் 1950கள் வரை குமிழறைகள் கண்டுபிடிக்கப்படும் வரை துகள் இயற்பியலில் முகிலறைகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. குறிப்பாக, 1932ல் பாசிட்ரான், 1936ல் மியூயான், 1947ல் கேயான் போன்றவை முகிலறைகளைப் பயன்படுத்தியே கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் அயனிகளாலும், கதிர்வீச்சினாலும் ஏற்படக்கூடிய முகிற்சுவடுகளை அவதானித்தார். முகிலறையைக் (Wilson cloud chamber) கண்டுபிடித்தமைக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சார்ல்சு தாம்சன் ரீஸ் நவம்பர் 15, 1959ல் தனது 90அகவையில் எடின்பரோ ஸ்காட்லாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.




இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்?

 காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்? பள்ளிக்கூட காலத்தில் இரண்டு சாதாரண காந்தங்களை கையில் வைத்திருப்பது புதையல் ஆகும். ஒரு காந்தம் வை...