Tuesday, August 17, 2021

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் - இந்திய அணி வரலாற்று வெற்றி.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் - இந்திய அணி வரலாற்று வெற்றி.

இந்திய கிரிக்கெட் அணி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தை 120 ரன்களில் ஆல் அவுட் செய்தது இந்தியா. இதன் மூலம் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

சிராஜ் (4),பும்ரா (3), இஷாந்த் ஷர்மா (2), ஷமி (1) என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இந்த இன்னிங்ஸில் மூன்று கேட்ச்களையும் இந்தியா டிராப் செய்திருந்தது. 

60 ஓவர்களில் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என இங்கிலாந்துக்கு இலக்கு நிர்ணயித்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா. 

கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா, சிராஜ், பும்ரா, இஷாந்த் ஷர்மா, ரகானே, புஜாரா, முகமது ஷமி என இந்திய அணி வீரர்கள் இந்த வெற்றியில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தனர். 

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1 - 0 என லீட் செய்கிறது. இந்த தொடரில் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளது. முதல் போட்டி டிராவில் முடிந்திருந்தது. 



இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...