Friday, August 6, 2021

✍🏻🌾🌾இயற்கை வாழ்வியல் முறை🌾🌾 மூங்கில் அரிசியின் பயன்கள்.

✍🏻🌾🌾இயற்கை வாழ்வியல் முறை🌾🌾 மூங்கில் அரிசியின் பயன்கள்.

 🌾🌾🌾🌾🌾 

மூங்கில் அரிசி என்பது காடுகளில் வளர்கின்ற மூங்கிலின் பூ பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் அரிசியாகும். மூங்கில் அரிசி ஆனது அதிகமான ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்களை கொண்டது. மூங்கிலில் இருந்து சேகரிக்கப்படும் அரிசி மிக குறைந்த அளவிலேயே கிடைக்கும். மூங்கில் மரம் 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். இந்த மூங்கில் பூவிற்குள் அரிசி இருக்கும். இந்த பூ பூத்த பின்னர் அந்த மூங்கில் மரம் பட்டுவிடும்

நீண்ட ஆண்டுகள் வளர்ந்த மூங்கில் மரங்களில் மட்டுமே பூக்கள் பூக்கும். அதிலிருந்து மட்டுமே மூங்கில் அரிசியை சேகரிக்க முடியும். காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த சத்துக்கள் நிறைந்த மூங்கில் அரிசியும் முக்கியமான காரணம்.

மூங்கில் அரிசி உயரமான மூங்கில் மரங்களில் இருந்து தானாகவே பூமியில் விழும். அவை சேகரிக்கபட்டு விற்பனைக்கு வருகிறது. இயற்கையின் அருட்கொடையால் பூமிக்கு வரும் மூங்கில் அரிசி உன்னதமானது

நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்

இதை உண்பதால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும் மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது.

மூங்கில் அரிசியில் செய்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

🌾🌾🌾🌾🌾

கருத்தரித்த பெண்களுக்கு சிறந்தது

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டது. எனவே கர்ப்பமான பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிட செய்யலாம்.

உடல் பலம் பெறும்

மூங்கில்  அரிசியை சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் வலு பெரும். இது உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும்.

சந்ததிகளைஉருவாக்கும்

குழந்தைபேறு உருவாக்குவதில் மூங்கில் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களில் குழந்தை இல்லாதவர்கள் மிகவும் குறைவு. இதற்க்கு அவர்கள் உண்ட மூங்கில் அரிசியும் ஒரு மிக முக்கிய காரணம்.

🌾🌾🌾🌾🌾

எலும்புகள் வலுவடையும்

உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் இந்த அரிசிக்கு உண்டு  அதிக பசி ஏற்படாமல் தடுக்கும். இந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் கழுத்து வலி, இடுப்பு வலி போன்றவை சரியாகும். நார்ச்சத்து மிக்கது, உடல் வலிமை பெரும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும், நரம்புத் தளர்ச்சியை சரி செய்யும்.

🌾🌾🌾🌾🌾

மூங்கில் அரிசிக் கஞ்சி 

தேவையானவை: மூங்கில் அரிசி, நொய் அரிசி – தலா 150 கிராம், சீரகம், ஓமம் – தலா அரைத் தேக்கரண்டி, பூண்டு – 6 பல், சுக்கு – ஒரு துண்டு, நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவைக்கு.

செய்முறை: மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில், நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும்.

மருத்துவப் பயன்: மூட்டு வலி, மூட்டில் நீர் கோத்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்

நாம் வழக்கமான அரிசியில் செய்யும் அத்தனை உணவுகளையும் இந்த மூங்கில் அரிசியிலும் செய்ய முடியும்.

🌾🌾🌾🌾🌾

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...