Tuesday, August 10, 2021

✍🏻🎪🎪இயற்கை வாழ்வியல் முறை🎪🎪மூக்கடலையின் மருத்துவ நன்மைகள்.

✍🏻🎪🎪இயற்கை வாழ்வியல் முறை🎪🎪மூக்கடலையின் மருத்துவ நன்மைகள்.

🎪🎪🎪🎪🎪🎪

சுண்டல் என்றாலே, பொதுவாகக் கறுப்புக் கொண்டைக்கடலை சுண்டல்தான். உறுதியாகவும் இனிப்பு சுவை இல்லாமலும் இருப்பதால் உப்பு சேர்த்தோ, வேக வைத்தோ, வறுக்கப்பட்டோ சாப்பிடப்படுகிறது. பொரிகடலை கடைகளில் விற்கப்படும் உப்புக்கடலை, மிகவும் பிரபலமான ஒரு நொறுவை. உடைச்ச கடலை எனப்படும் பொட்டுக்கடலையும் அதற்கு இணையாகப் பிரபலமானதுதான்.

🎪🎪🎪🎪🎪🎪

புட்டு, ஆப்பத்துக்குச் சிறப்பு சுவை சேர்க்கும் கேரளக் கடலைக்கறி, கறுப்புக் கொண்டைக்கடலை குழம்புதான். இது முளை கட்டப்பட்டுச் சாலட்களில் சேர்க்கப்படுகிறது. கெட்டி குழம்பு, சூப்புகளில் இடம்பிடிக்கிறது. தெற்காசியாவில் பல்வேறு சுவையான உணவு வகைகளில், கறுப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தப்படுகிறது. இதை வறுத்துப் பொடி செய்து, நீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் காப்பியைப் போலப் பயன்படுத்தலாம்.

🎪🎪🎪🎪🎪🎪

கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற ஃபைட்டோ வேதிப்பொருட்கள் அதிகமுள்ளன.

வெள்ளைக் கொண்டைக்கடலையைவிட இதில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு.

குளுகோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

இதன் சாறு இரும்புச்சத்து நிரம்பியது. இரும்புச் சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது.

🎪🎪🎪🎪🎪🎪

வேக வைத்த கறுப்புக் கொண்டைக்கடலை ஒரு கப் 269 கலோரி சக்தியைத் தரும். அதேநேரம் இதில் இருக்கும் 15 கிராம் புரதம், ஒரு நாளைக்குத் தேவையான 2000 கலோரி உணவில் 30 சதவீதத்தை ஆரோக்கியமான வகையில் தரக்கூடியது.


🎪🎪🎪🎪🎪🎪

முதிராத கொண்டைக்கடலையில் சிறிது நீர் விட்டு அருந்த, சீதக்கழிச்சல் உடனடியாகக் கட்டுப்படும்.

 சிறுநீர்ப்பெருக்கி செய்கை இருப்பதால், சிறுநீர் அடைப்பை சரி செய்யும் தன்மை, கறுப்புக் கொண்டைக்கடலை சுடுநீருக்கு உண்டு.

🎪🎪🎪🎪🎪🎪

இளம் கொண்டைக்கடலை விதைகளுக்குக் காமம் பெருக்கும் செய்கை உண்டு.

🎪🎪🎪🎪🎪🎪

கொண்டைக்கடலைச் செடியின் மீது ஒரு வெள்ளைத் துணியை இட்டு, அதன் மீது படியும் பனி நீரைப் பிழிந்து சேகரிப்பது கடலைப் புளிப்பு’ என்று அழைக்கப்படுகிறது செரியாமை, வாந்தி போன்ற நோய்களுக்கு இந்தப் புளிப்பு நீர் மருந்தாகப் பயன்படுகிறது.

🎪🎪🎪🎪🎪🎪

கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலையில் புரதம், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் பல வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் உள்ளன. 

🎪🎪🎪🎪🎪🎪

மூக்கடலை சுண்டல் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலமடையும், உடல் உறுதியாகும். 

கடலையை அரைத்துப் பாலில் கலந்து குடித்தால் சீதக் கழிச்சல் குணமாகும். 

🎪🎪🎪🎪🎪🎪

பச்சைக் கொண்டைக் கடலையை ஊறவைத்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும். நுரையீரல் தொடர்பான நோய்களும் குணமாகும்.


மேலும் இந்த சுண்டலை தினமும் 2-3 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். இங்கு ப்ரௌன் நிற சுண்டலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

🎪🎪🎪🎪🎪🎪

சுண்டலில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவி புரியும். அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல், அதனால் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.

  🎪🎪🎪🎪🎪🎪

கொலஸ்ட்ரால் குறையும்

சுண்டலில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறையும். அதற்கு தினமும் 3/4 கப் ப்ரௌன் நிற சுண்டலை வேக வைத்து சாப்பிட்டு வாருங்கள்.

🎪🎪🎪🎪🎪🎪

சிறுநீர் பிரச்சினைகள் தீர

கொண்டைக்கடலையை வறுத்து பொடி செய்து தினமும் இருவேளை உட்கொண்டு வர வயிறு பொருமல், சிறுநீர் சரிவர வெளிப்படாமல் சொட்டு சொட்டாக போதல், சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.

🎪🎪🎪🎪🎪🎪

தலைவலி, தலைபாரம் குணமாக

கொண்டைக்கடலையை லேசாக வறுத்து சாப்பிட்டு பின் பால் அருந்தி வர இருமல், தலைவலி, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

🎪🎪🎪🎪🎪🎪

உடல் உறுதி பெற

கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, புரதம், சுண்ணாம்பு சத்து மற்றும் பல வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் இதனை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எலும்பு, நரம்புகள் பலமடையும், அத்துடன் உடலை உறுதியாக்கும். பச்சையாக இல்லாமல் அவித்து சுண்டல் செய்தும் சாப்பிடலாம்.கொண்டைக்கடலையை அவித்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர உடலுக்கு உறுதியை கொடுக்கும்.

🎪🎪🎪🎪🎪

பின்குறிப்பு

வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக் கடலையை தவிர்ப்பது நல்லது. இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். எனவே இதனை அளவோடு பயன்படுத்துவது நல்லது.

🎪🎪🎪🎪🎪          

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...