Monday, August 23, 2021

✍🏻🤹‍♂️🤹‍♂️இயற்கை வாழ்வியல் முறை🤹‍♂️🤹‍♂️பூவரசம் பூ மரத்தின் நன்மைகள்.

✍🏻🤹‍♂️🤹‍♂️இயற்கை வாழ்வியல் முறை🤹‍♂️🤹‍♂️பூவரசம் பூ மரத்தின் நன்மைகள்.

🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️

பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று. காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது

🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️

இதில் கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை

🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️

பூவரசம் இலைகள் விஷத்தை போக்கும் தன்மை இருப்பதால் பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டு கடிகளுக்கு, மருந்தாக சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வந்தனர். பூக்களை நீர் விட்டு பாதியாக சுண்டக்காய்ச்சி இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்க வேண்டும்.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து, குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியும் மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.

சொறி, சிரங்கினால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசி வந்தால் தோல் மென்மையாகும். சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து, அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம்பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லி லிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிட வேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது.

வயதானவர்கள் மூட்டுப்பகுதியில், நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சம அளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசி வர, வீக்கம் குணமடையும்.

🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️

பூவரசு மரத்தில் அதன் பட்டைகளுக்கு சிறப்பான மருத்துவக்குணங்கள் உள்ளன. இதன் பட்டைகளை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி தோல்  நோய்களுக்குப் பூசி பலன் பெறலாம்.

🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️

பூவரசு மரப்பட்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றியதும் வடிகட்டிக் குடித்தால் வயிறு கழியும். இதனால் காணாக்கடி, நஞ்சு, பெருவயிறு, வீக்கம் போன்றவை சரியாகும்.

 🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️

முதிர்ந்த பட்டையை அரைத்துப் பூசுவது மற்றும் தேங்காய் எண்ணெய்யில் போட்டு கொதிக்க வைத்து உதட்டில் வரும் வெண்புள்ளியில் பூசினால் பிரச்சினை சரியாகும். வைட்டமின் குறைபாட்டால் வரும் இந்தப் பிரச்சினைகளை சரிசெய்ய பூவரசம் பட்டை உதவும்.

 🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️

பூவரசங்காயை இடித்து சாறு பிழிந்தால் இலேசான பசபசப்புடன் மஞ்சள் நிற சாறு வரும். இதை முகத்திலுள்ள கறுப்புப் பகுதிகள், செயின் உராய்வதால் உண்டான கறுத்த பகுதிகளில் தடவினால் கருமை மாறும்.

🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️ 

இலையை அரைத்துச் சூடாக்கி வீக்கங்களின்மீது கட்டினாலும் பலன் கிடைக்கும். சருகாகிப்போன இலைகளை தீயில் எரித்து அதன் சாம்பலையும்கூட தோல்  நோய்களுக்குப் பூசி குணமடையலாம்.

🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️ 

கசப்புச்சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை, காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக் கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான, கால்நடை நோய்களை கட்டுப்படுத்துவதிலும், பூவரசம்பூ முக்கிய பங்கு வகிக்கிறது.

பூவரசம் காயை உடைத்தால், மஞ்சள் நிறத்தில் திரவம் வரும். அதை தேமல் மற்றும் படை வந்த இடத்தில் தடவினால், விரைவில் அரிப்பு நீங்கி, தேமல் மறையும். சீல் வடியும் புண்களில், பூவரசம் மரத்தின் பழுத்த இலைகளை வைத்து கட்டினால், நீர் உறிஞ்சப்பட்டு புண் நன்றாக ஆறிவிடும்.

🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️

பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சம அளவு பறங்கிப் பட்டை சேர்த்து நன்கு இடித்து சூரண்ம் செய்து கொள்ள வேண்டும். இதனைஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் காலை,மாலை இரண்டு வேளை உண்டு வந்தால் நாட்பட்ட தொழு நோய்க்கு நன்மை பயக்கும். இதை உட்கொள்ளும் போது உணவில் உப்பை நீக்க வேண்டும்.

இதில் கூறப்பட்டுள்ள மருத்துவ பயன்களை சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, இந்த ஆலோசனைகளை பயன்படுத்துவது நல்லது.

🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♂️

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...