Wednesday, August 4, 2021

✍🏻🍀🍀இயற்கை வாழ்வியல் முறை🍀🍀தூதுவளை கீரையின் நன்மைகள்.

✍🏻🍀🍀இயற்கை வாழ்வியல் முறை🍀🍀தூதுவளை கீரையின் நன்மைகள்.

🍀🍀🍀🍀🍀 

தூதுவளை எல்லா இடங்களிலும் வளரும் ஒரு காயகற்ப மூலிகை வகையை சேர்ந்த ஒரு கீரையாகும் இது சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுகிறது. தூதுவளைக்கு சிங்கவல்லி அளர்க்கம் தூதுளை தூதுளம் என்ற பெயர்களும் உண்டு. இது மரங்களை பற்றியபடி வளரும் கொடி வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் இலைகளில் சிறு முட்கள் காணப்படும். தூதுவளையின் இல்லை, இலை, பூ, காய், வேர் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.

இதன் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும். வெள்ளை நிறத்தில் பூக்கும் அரிதான தூதுவளை வகையும் உண்டு. தூதுவளை வெறும் சளி, இருமலுக்கு மட்டும் தான் நல்ல மருந்து என பலரும் நினைகின்றனர். ஆனால் எண்ணிலடங்கா மருத்துவ நன்மைகளை தூதுவளை நமக்கு அளிக்கிறது. அவற்றில் சிலவற்றை இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.

🍀🍀🍀🍀🍀 

தூதுவளை கீரையை நெய்யில் வதக்கி துவையலாகவோ அல்லது குழம்பு போல செய்து சாப்பிட்டால், நெஞ்சில் கட்டியிருக்கும் கபம் நீக்கி உடல் பலமடையும்.

 🍀🍀🍀🍀🍀 

தூதுவளை இலைச் சாற்றை நெய்யில் காய்ச்சிக் காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்கள் குணமடையும்.

🍀🍀🍀🍀🍀

தூதுவளை கீரையின் இலையில் ரசம் வைத்து சாப்பிட்டால் உடல்வலி, நுரையீரல் கோளாறுகள் குணமடையும்.

🍀🍀🍀🍀🍀

தூதுவளை கீரையை சமைத்து சாப்பிட்டால், பற்கள் வலுவாகும் மற்றும் பித்த நோயும் குணமாகும்.

🍀🍀🍀🍀🍀

தூதுவளை இலையை அரைத்து தண்ணீருடன் சேர்த்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு உள்ளிட்ட நோய்கள் நம்மை நெருங்காது.

🍀🍀🍀🍀🍀

தொண்டை வலியால் அவதிப்படுப்பவர்கள், தூதுவளை இலையை கஷாயம் போல செய்து குடிப்பது நல்லது.

🍀🍀🍀🍀🍀

தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

🍀🍀🍀🍀🍀 

தூதுவளை இலையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும் இந்திரியம் அதிகமாகி ஆண்மை பெருகும்.

🍀🍀🍀🍀🍀

தூதுவளைப் பூவை உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு சேர்க்கும்

🍀🍀🍀🍀🍀 

தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் போல செய்து நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல், மற்றும் கண் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

🍀🍀🍀🍀🍀 

தூதுவளையில் கால்சியமும்,இருப்புச் சத்தும் அதிகம் எனவே தூதுவளையை ரசம் போல செய்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுபெறும் மூட்டு தேய்மானம் வராது.

தூதுவளை நல்ல செரிமானத்தை அளிக்கக் கூடியது. எனவே அஜீரண கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

🍀🍀🍀🍀🍀

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...