Saturday, August 21, 2021

✍🏻🦘🦘இயற்கை வாழ்வியல் முறை🦘🦘சம்பங்கி பூவின் நன்மைகள்.

✍🏻🦘🦘இயற்கை வாழ்வியல் முறை🦘🦘சம்பங்கி பூவின் நன்மைகள்.

🦘🦘🦘🦘🦘🦘

சம்பங்கி பூ பூஜைக்கு ஏற்றது. அவ்வளவு சீக்கிரத்தில் வாடாது. இதன் சாறு நறுமணப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன அனைத்து வகை மண்ணிலும் சம்பங்கி வளரும் சரளை செம்மண்ணில் நன்றாக வளரும்.

🦘🦘🦘🦘🦘🦘

மனம் தரும் சம்பங்கி பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது இதன் விதை, இலை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை கோடை வெயிலால் ஏற்படும் வேர்க்குரு போன்ற சரும பிரச்சனைகளுக்கு சம்பங்கி பூ தைலம் பயன்படுகிறது.

🦘🦘🦘🦘🦘🦘

அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் 50 கிராம் சம்பங்கி பூவை போட்டு அந்த தைலத்தை உச்சி முதல் பாதம் வரை தடவி வந்தால் வியர்க்குரு மறையும் மேலும் உடல் குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

🦘🦘🦘🦘🦘🦘

சம்பங்கி பூ குளியல் பவுடர் தயாரிப்பது எப்படி

🦘🦘🦘🦘🦘🦘

சம்பங்கி 100 கிராம், வெள்ளரி விதை 20 கிராம் பயத்தம் பருப்பு 200 கிராம் இவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தைலம் தேய்த்துக் குளிக்கும் போது இந்தப் பவுடரை பயன்படுத்தி வந்தால் தோல் மினுமினுப்பாக இருக்கும்.

🦘🦘🦘🦘🦘🦘

ஒரு கைப்பிடி அளவு சம்பங்கிப்பூக்கள் கொதிக்கும் நீரில் போட்டு, வாரம் இருமுறை ஆவி பிடித்து வந்தால் முகத்தில் ஏற்பட்ட தழும்புகள் மறைந்துவிடும்.

🦘🦘🦘🦘🦘🦘

4 சம்பங்கி பூவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலந்து அரைத்துக் கொள்ளுங்கள் இந்த விழுதை சூடு பறக்க நெற்றி பகுதியில் தடவினால் தலைவலி உடனே குறையும்.

🦘🦘🦘🦘🦘🦘

பாத வலி நீங்க சம்பங்கி இலையை மை போல அரைத்து பாதங்களில் தடவி வந்தால் வலி நீங்கும்.

🦘🦘🦘🦘🦘🦘

சம்பங்கி மர இலைகளுக்கும் துளிர்களுக்கும் கர்ப்பப் பையில் உள்ள எல்லாவிதமான நோய்களையும் கட்டுப்படுத்தும் சக்தி இதற்குண்டு ஆறாத புண்களை இதன் இலையை நெருப்பில் வதக்கி கட்டினால் புண் ஆறிவிடும். இம்மரத்தின் பட்டையை கஷாயம் வைத்து சாப்பிட்டால் ஜீரம் குணமாகும்

🦘🦘🦘🦘🦘🦘

சம்பகப்பூ கஷாயம் ஆசீரணம் மலக்கட்டு முதலியவைகளையும் நீக்கும். இக் கஷாயம் கனேரியா’ என்ற வியாதிக்கு கொடுக்க விரைவில் குணமாகும்.

🦘🦘🦘🦘🦘🦘

சம்பங்கி பூவை ஆலிவ் எண்ணெயுடன் கலந்து அரைத்து தலைவலிக்கு தடவினால் தலைவலி தீரும். கண்களை சுற்றி பற்றுபோட கண் எரிச்சல் – கண்களில் நீர்வடிதல் – கண் சிவந்திருத்தல் குணமாகும். சம்பங்கி பூக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 500 மில்லி தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சி வடிகட்டி தினம் இரண்டு வேலை சாப்பிட வாந்தி வயிற்று வலி குணமாகும்.

🦘🦘🦘🦘🦘🦘

இதன் பட்டையை நன்றாக உலர்த்தி தூள் செய்து வைத்துக் கொண்டு – 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட எல்லா விதமான காய்ச்சலும் குணமாகும். இரைப்பையின் உண்டாகும் புண்களை(அல்சர்) ஆற்றும். இதன் பட்டையை தயிர் விட்டு அரைத்துக் கட்டிகளுக்கு போட கரைந்து போய்விடும். சீழ் கொண்டிருந்தால் உடைத்து சீழை வெளியேற்றி விடும்

🦘🦘🦘🦘🦘🦘

சிலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு... சம்பங்கி விதை - 50 கிராம், சம்பங்கி பூக்கள் - 50 கிராம், துளசி - 10 கிராம், லவங்கம் - 5 கிராம், வேப்பிலை-10 கிராம் இவற்றை அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் குழைத்து பருக்கள் மீது தடவி வர பருக்கள் குறையும். 

🦘🦘🦘🦘🦘🦘

ஒரு கைப்பிடி சம்பங்கி பூக்களை, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வாரம் இருமுறை ஆவி பிடித்து வர முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். தலை பொடுகை போக்கி, தலைக்கு பாதுகாப்பை கொடுக்கிறது சம்பங்கி இலை. வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன், சம்பங்கி இலை - 3... இரண்டையும் சேர்த்து அம்மியில் அரைத்துக் கொள்ளுங்கள் இதில் 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறை கலந்து தலைக்கு பேக் போடுங்கள் அரிப்பு, பொடுகு அத்தனையும் நீங்கி, கூந்தல் வாசம் வீசும் உடம்பைத் தாங்கி நிற்கும் பாதங்களில் ஏற்படும் வலி மற்றும் வெடிப்பைப் போக்குகிறது

🦘🦘🦘🦘🦘🦘

சம்பங்கி. இதன் இலையை மையாக அரைத்து பாதத்தில் தடவிவர பாதவலி பறந்துவிடும். 200 கிராம் நல்லெண்ணெயுடன், 50 கிராம் சம்பங்கி பூக்களைப் போட்டுக் காய்ச்சுங்கள் இதில் சிறிது விளக்கெண்ணெய் கலந்து கணுக்கால் பாதத்தில் தடவுங்கள். சொரசொரப்பு, வெடிப்பு விருட்டென ஓடிவிடும். இந்த தைலத்தில் விளக்கெண்ணெய் சேர்க்காமல் நன்றாக ஆற வைத்து, எலுமிச்சைச் சாறை கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இதை தினமும் காலை, இரவில் தடவி வர.. பாதம் பஞ்சு போல் மென்மையாக இருக்கும். 

🦘🦘🦘🦘🦘🦘

ஒரு டம்ளர் தண்ணீரில் 5 சம்பங்கிப் பூவைப் போட்டு காய்ச்சி பாதியாக குறுக்குங்கள். இந்த தண்ணீரை காலை, மாலை குடித்து வர மலச்சிக்கல் மிரண்டு ஓடும். நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும். வெயிலால் வந்த ஜுரம் குணமாகும்.

🦘🦘🦘🦘🦘🦘

சம்பங்கி பூவை சிறிது தண்ணீர் விட்டு அரையுங்கள். இந்த விழுதை கண்களை சுற்றி பூசி.. துணியால் கட்டி பத்து நிமிடத்துக்குப் பிறகு கழுவுங்கள். கண் நோய் சம்பந்தப்பட்ட வலி, எரிச்சல், நீர் வடிதல், வறட்சி... இவற்றையெல்லாம் போக்கி, குளிர்ச்சியைத் தந்து, கண்களை பளீரென பிரகாசிக்க வைக்கும். காய்ச்சிய பாலில் 2 பூவை போட்டு ஆற வையுங்கள். இதில் சர்க்கரை (அ) வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் வீதம் 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வர உடம்பில் தெம்பும் பலமும் பெருகும்.

🦘🦘🦘🦘🦘 

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...