Wednesday, September 1, 2021

இந்தியாவில் ஒரே மாதத்தில் 30 லட்சம் வாட்ஸ்-அப் கணக்குகள் நீக்கம்.

இந்தியாவில் ஒரே மாதத்தில் 30 லட்சம் வாட்ஸ்-அப் கணக்குகள் நீக்கம்.

இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், 30 லட்சம் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிறுவனங்கள், புகார்கள் மற்றும் அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை 45 நாட்களுக்கு ஒருமுறை வெளியிட வேண்டும்.

அதன்படி, வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலை 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலான காலத்தில் 594 குறைதீர் மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் 30 லட்சம் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சந்திர கிரகணம் விழிப்புணர்வு.

மண்ணச்சநல்லூர் அரசு  மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சந்திர கிரகணம் விழிப்புணர்வு. நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் முன...