Sunday, September 5, 2021

🖊️கவிதை 🖊️ 👩‍🏫ஆசிரியர் தினம்👩‍🏫

 🖊️கவிதை 🖊️

    👩‍🏫ஆசிரியர் தினம்👩‍🏫

ஆசிரியர் தினமே!!! 

எங்கள் ஆசான் தினமே!!! 

அரவணைத்த எங்கள் ஆசிரியர்களின் அற்புதத் தினமே!!! 

உலகின் சிறப்பான தினங்களில் நீயும் ஒன்றல்லவோ??? 


எங்கள் குறும்புத்தனங்களை பொறுத்துக் கொள்ளும் பொன்னானவர்களின் தினமே!!! 

படிக்காமல் விளையாட்டுத் தனமாய் இருந்த எங்களை விண்வெளியை அடையச் செய்த விவேகமானவர்களின் தினமே!!! 

உலகமே போற்றும் தினங்களில் நீயும் ஒன்றல்லவோ??? 

ஆசிரியர் பணி அறப்பணி!அதற்கே உன்னை அற்பணி! 

என எங்களுக்காக உழைத்த எங்கள் ஆசிரியர்களுக்கு நன்றிகடன் செய்ய மாணவர்களுக்கு கிடைத்த மகத்தான தினமே!!! 

நாங்கள் நல்வாழ்வு பெற நாள்தோறும் உழைத்த எங்கள் நல்லுறவின் தினமே!!! 


ஆசிரியர்கள் அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 🌸🌸🌸

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


ஆசிரியர் தினம்


என் ஆசிரியருக்கு பரிசு வாங்க 
பல கடைகளை தேடிச் சென்றேன்....


   பிறகு தான் புரிந்தது என் ஆசிரியரை விட 
விலை மதிப்பான பரிசு 
இவ்வுலகிலேயே இல்லை என்று🥰🥰


  தன் பிள்ளையின் வெற்றியை விட ..
  தன்னிடம் கல்வி கற்ற பிள்ளையின் 
வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடையும்
 மாமனிதர்கள் எமது ஆசிரியர்களே....🥰🥰


       தாம் உளியாய் இருந்து மாணவர்களை 
சிலையாய் ஆக்கும் சிற்பிகளே...


          தாம் கோவிலாய் இருந்து மாணவர்களை 
கலசம் ஆக வைக்கும் அன்பு உள்ளங்களே...


          ஆசிரியர் பணியே அறப்பணி...
         அதற்கே உன்னை அற்பணி....
          அதுவே அற்புத பணி
         
     நன்றி!
✍️கவிதை ✍️: ரா. கார்த்திகா, இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.



ஆர்வமற்ற அறிவிலிக்கும் வார்த்தையெனும் 

அமுதாய் வாசகங்களை ஊட்டி....

பேதைகளையும் மேதைகளாக்கிய 

சாதனையாளர்கள் ....!

ஆசிரியர்களே.... 

✍️கவிதை ✍️: பிரியா, இயற்பியல், அரசு கலை அறிவியல் கல்லூரி, கும்பகோணம். 


என் ஆசிரியருக்கு, என் ஆசிரியர் தின பரிசு அன்பு கவிதையே!!!
அன்புள்ள ஆசிரியரே,

என் இதயத்தின் 
உண்மையான வழிகாட்டி, நீங்கள்....

என் அன்னை அளவிற்கு 
அன்பு காட்டியவர் நீங்கள்....

என் தந்த போல் 
கண்டித்தவர் நீங்கள்....

நான் குறும்புகள் செய்யும் போது 
திருத்தும் தாயாக நீங்கள்...

நான் வருந்தும் போது 
தோள் கொடுக்கும் தோழனாக நீங்கள்...

நான் கலங்கும் போது 
கட்டிக்காக்கும் தந்தையாக நீங்கள்...

நான் தனிமையில் வருந்தும் போது 
இனிமை தரும் அழகிய குடும்பமாய் நீங்கள்...

சேட்டைகளில் செல்ல பிள்ளைகளாக 
நாங்கள் அதை சேவையுடன் செதுக்கி எடுக்கும் சிற்பிகளாய் நீங்கள் ...

பொறுமையே இல்லாதவலாய் இருந்தவளை 
பொறுப்புள்வளாக மாற்றிய ஆயுதம் கொண்டவர் நீங்கள் ....

என் கஷ்டங்களையெல்லாம் உங்கள் 
"பணியில்" பனி போல் விளக்கியவரை 
பணிந்து பாதம் தொட்டு வணங்கி 
என் பயணத்தை துவங்குகிறேன்...
 
என் பயணத்தில் உயர்ந்த நிழல் தரும் மரங்களாக விளங்கும் 
என் அறத்தின் ஆழியான ஆசிரியருக்கு 
என் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..

✍️கவிதை ✍️: துர்கா ராஜா, இயற்பியல், அரசு கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல்.

💐🇮🇳💐ஆசிரியர் தின வாழ்த்துக்கள்💐🇮🇳💐

பொட்டல் காடாய் இருந்த என்னையும் கழனியாய் மாற்றிய கடவுளே...

தரிசு நிலமாய் இருந்த என்னை நஞ்சை நிலமாக்கிய உழவனே...

ABCD தெரியாத எம்மையும் M.Sc.,M. Phil.,Ph.D., பட்டம் பெற செதுக்கிய சிற்பியே...

சுட்டுப்போட்டாலும் ஆங்கில வாசனையே இல்லாத என்னை இன்று DOCTOR க்கே சுட்டிக்காட்டி ஆங்லத்தில் உரையாட கற்றுத்தந்த OXFORD UNIVERSITY யே...

DIRECT...INDIRECT... CONVERSATION... சொல்லிதந்தபோது நீர் என் கரத்தில் அடித்த ஒவ்வொறு அடியும் ஒரு மாத சம்பளமாய் கொட்டுகிறது என் கரத்தில் பணமழையாய் இன்று...

மாணவனை அடக்குவது ஆசிரியர் கடமையல்ல... திருத்துவதே ஆசானுக்கு அழகு என்று எம் சேட்டைகளை எல்லாம் பொறுத்துக் கொண்ட பரமபிதாவே...

ஊக்காளியாய் சுற்றிய எம்மை அழைத்து ஆக்கமும் ஊக்கமும் தந்து பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெறவைத்த முனைவரே...

பள்ளிக்கூடம் பாதை கூட சரியாக தெரியாத என்னை இன்று MUMBAI...DELHI... AHAMEDABAD...என பல ஊர்களுக்கு பயமின்றி செல்ல கற்றுத்தந்த வழிகாட்டியே...

நாளே போ...       தாளே வா... என்றுபொழுதை கழிக்காமல் ஒவ்வொறு பொழுதிலும் புதுபுது சிந்தனையை தூண்டிவிட்ட தூண்டாமணி விளக்கே...

எத்தனை GOOGLE வந்தாலும் என் GOOGLE நீங்களே...என் சந்தேகத்தை போக்கும் ENCYCLOPEDIA வும் நீங்களே...

நீவிர் வாழ்க நலமுடனும் வளமுடனும் பலநூறு ஆண்டுகள்...

எழுத்தறிவித்த இறைவனை பாதம் தொட்டு வணங்குவதில் பெருமை கொள்கிறேன் ஆசிரியர் தின நன்நாளில்...

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: முனைவர். P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...