Saturday, September 18, 2021

தமிழர் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு அங்கீகாரம்.

தமிழர் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு அங்கீகாரம்.

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருக்கிறார்.

புதிய தலைமுறைக்கு அவர் அளித்தப் பேட்டியில், ’’முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் தமிழர்களின் பாரம்பரிய விலையாட்டான சிலம்பம் தேசிய விளையாட்டுப் பட்டியலில் சேர்க்கப்படும் எனவும், சிலம்பம் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், மாணவர்களின் பாடப்பிரிவில் சிலம்பம் பற்றி சேர்க்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். தற்போது தமிழக முதல்வரின் முயற்சியால் புதிய கேலோ இந்தியா திட்டத்தில் சிலம்பம் விளையாட்டை ஒன்றிய அரசு சேர்த்துள்ளது. கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் விளையாட்டின்மூலம் சிலம்பம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவிக்கும்’’ என அவர் தெரிவித்தார்.






இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...