✍🏻💤💤இயற்கை வாழ்வியல் முறை💤💤முடக்கத்தான் கீரை நன்மைகள்.
💤💤💤💤💤
உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் இதற்கு முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் காரணம் ஏற்பட்டது. முடக்கறுத்தான் பேச்சு வழக்கில் முடக்கத்தான் ஆனது. இந்த முடக்கற்றான் மூலிகை வாயு பகவானின் மூலிகை என அழைக்கபடுகிறது. இது உடலில் ஏற்படும் வாய்வு பிரச்சனைகளை விரட்டி அடிக்கும் அருமருந்தாகும்.
💤💤💤💤
முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை, இந்திய ஆராய்ச்சியாளர் குழுவினரும், ஆஸ்திரேலிய பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்தனர். இதன் சிறப்புக் குணம், நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து, சிறுநீரகத்துக்கு எடுத்துச்சென்று விடும்
💤💤💤💤💤
சிறுநீரை உடனடியாக கழித்துவிடாமல், நாம் அடக்கி வைத்துக்கொள்கிறோம். இது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதை நாம் அறிவதில்லை. நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால் இது உடலின் பிற பகுதிகளுக்கு சென்று விடுகிறது. அவ்வாறு செல்லும்போது, ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்த சிறு, சிறு கற்கள், சினோரியல் மெம்கிரேம் என்ற இடத்தில் தங்கிவிடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது.
💤💤💤💤💤
சிலருக்கு, 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலை.
💤💤💤💤💤
முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிடலாம். கீரையை கொதிக்க வைத்து சாப்பிட கூடாது. கொதிக்க வைத்தால் மருத்துவ சத்துக்கள் அழிந்து விடும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரையை எண்ணெய்யில் இட்டு காய்ச்சி மூட்டு வலிக்கு பூசினால் மூட்டு வலி விரைவில் குணமாகும்.
💤💤💤💤💤
முடக்கத்தான் கீரையை சமைத்து சாப்பிட்டால், கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீண்ட, மடக்க முடியாமல் இருப்பது, நடக்க முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்.
💤💤💤💤💤
முடக்கத்தான் இலைகளை நெய்யில் வதக்கி, இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி அல்லது துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
💤💤💤💤💤
முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன.
💤💤💤💤💤
முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுடன் உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.
💤💤💤💤💤
முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
💤💤💤💤💤
முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்
💤💤💤💤💤
முடக்கத்தான் கீரையை வாய்வு பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
💤💤💤💤💤
மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. ஒரு மேஜைக்கரண்டி முடக்கத்தான் கீரை சாறு பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும்
💤💤💤💤💤
இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.
💤💤💤💤💤
முடக்கத்தான் கீரையானது முதுகு எலும்பு தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும்.
💤💤💤💤💤
இதை ஆரம்பத்தில் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். மூளைக்கு பலம் தரும்.
💤💤💤💤💤
முடக்கத்தான் கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.
💤💤💤💤💤
🌷🌷🌷🌷🌷
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🦚🦚🦚🦚🦚
நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480, 6383487768.
((வாட்ஸ் அப்)) 7598258480
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9489666102.
No comments:
Post a Comment