Saturday, September 18, 2021

பான் - ஆதார் கார்டு இணைக்க அவகாசம் நீட்டிப்பு.

பான் - ஆதார் கார்டு இணைக்க அவகாசம் நீட்டிப்பு.

பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான அவகாசம் ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் 2021 நிதி மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், மார்ச் 31 ஆம் தேதிக்குள் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை தனி நபர்கள் இணைக்காமல் போனால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டி இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அபரதாம் செலுத்த வேண்டியது மட்டுமல்லாது பான் கார்டையும் பயன்படுத்த முடியாமல் போகும் நிலை உருவாகும் என சொல்லப்பட்டிருந்தது.

கடைசிநாளான இன்று பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வருமான வரித்துறையின் வலைத்தள பக்கத்திற்கு படையெடுத்ததால், அந்த பக்கம் முடங்கியது. அதையடுத்து பயனர்கள் கால நீட்டிப்பு வேண்டும் என சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வருமானவரித்துறை பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான அவகாசத்தை மார்ச் 31, 2022வரை நீட்டித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கால அவகாசத்தை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

Link  your Aadhar and PAN 

https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng

Check PAN Status 

https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html


இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...