ஏவுகணை சோதனை வெற்றி மத்திய அமைச்சர் பாராட்டு.
ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பான ஆகாஷ் பிரைம், சோதனையில் இலக்கை துல்லியமாக தாக்கியது என டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) இந்திய ராணுவத்திற்கு போர் தளவாடங்களை தயாரித்து கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஆகாஷ் ஏவுகணையின் புதிய பதிப்பான ஆகாஷ் பிரைம் ஏவுகணையை தயாரித்துள்ளது.
இந்த ஏவுகணையை ஒடிசாவில் உள்ள சாந்திபூரில் இருந்து பரிசோதித்தது. அப்போது குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த நிலையில் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.
ஆகாஷ் பிரைம் ஏவுகணை ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. ஆகாஷ் பிரைம் ஏவுகணையை மேம்படுத்தியபின், விமானத்தில் இருந்து பரிசோதிக்க உள்ளது டி.ஆர்.டி.ஓ.
No comments:
Post a Comment