Thursday, September 9, 2021

நாட்டின் சிறந்த கல்வி நிறுவன பட்டியல் - சென்னை ஐ.ஐ.டி முதலிடம்.

நாட்டின் சிறந்த கல்வி நிறுவன பட்டியல் - சென்னை ஐ.ஐ.டி முதலிடம்.


நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்தது. அதேபோல், சிறந்த கல்லூரிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 3 கல்லூரிகள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான ‛டாப் 10' பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார்.

அதில், ஒட்டுமொத்தமாக சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் மும்பை ஐஐடியும் உள்ளன.

சிறந்த பல்கலைகள் பட்டியலில் பெங்களூரு ஐஐடி முதலிடத்திலும், டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலை 2ம் இடத்திலும், வாரணாசியில் உள்ள பணாரஸ் ஹிந்து பல்கலை 3வது இடத்திலும் உள்ளது. கோவையை சேர்ந்த அமிர்தா விஸ்வ வித்ய பீடம் பல்கலை 5வது இடத்தை பிடித்து உள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்தது. டில்லி ஐஐடி 2ம் இடமும், மும்பை ஐஐடி 3ம் இடமும் பிடித்தது.




இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...